பக்கம்:கவி பாடலாம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெரிந்து கொள்ள வேண்டியவை 209

கடவுள் புறத்தே நின்று காக்க வாழ்க என்ற பொருளைப் பற்றி வருதலால் புறநிலை வாழ்த்து என்றும், ஒரு பக்கத்து விருப்பத்தைக் கூறுவதனால் கைக்கிளை என்றும், உண்மையை வற்புறுத்தி வாழ்த்துவதனால் வாயுறை வாழ்த்து என்றும் (வாய்-உண்மை), செவியில் அறிவுறுத்துவதனால் செவியறிவுறுஉ என்றும் இவை பெயர் பெற்றன.

17. தெரிந்து கொள்ள வேண்டியவை

Il Tப்பிலக்கணத்தில் ஒசையின் அளவை அலகு என்று சொல்வது வழக்கம். அலகு என்பதற்கே அளவு என்பது பொருள். ‘அலகிலா விளையாட்டுடையார்’ என்னும் கம்பராமாயணப் பாட்டில் அலகு என்பது அளவு என்னும் பொருளில் வந்திருக்கிறதைக் காண்க.

எழுத்துக்களில் அளவு குறைந்தவை சில உண்டு. ஒரு மொழியில் நிற்கும் போது சில காரணங்களால் அவை ஓசை குறைந்து ஒலிக்கும். குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், ஆய்தக்குறுக்கம், மகரக் குறுக்கம் என்ற எழுத்துக்கள் அத்தகையவை. இவை சொல்லினிடையே வரும்போதுதான் ஓசை குறைந்து நிற்கும். எழுத்திலக்கணம் சொல்லும் நூல்களில் இவற்றைப் பற்றிய செய்திகளைக் காணலாம்.

இந்த எழுத்துக்களில் குற்றியலிகரமும், குற்றியலு கரமும் செய்யுளில் சில இடங்களில் கணக்கிடப்படாமல் நிற்கும். அவற்றைக் கணக்கிட்டால் செய்யுளின் ஒசைக் கணக்குத் தவறிவிடும். ஆதலின், சேர்த்துக் கணக்கிட்டால்

&i, List.-14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/210&oldid=655812" இலிருந்து மீள்விக்கப்பட்டது