பக்கம்:கவி பாடலாம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவி பாடலாம்

தேமாங்காய் என்ற வாய்பாடாகும்; காய் முன் நிரை வந்து கலித்தளையாகிவிடும். ஆகவே அந்த அளபெடையைக் கணக்குப் பண்ணாமல், அது அலகு பெறாததாக வைத்துத் தேமா என்னும் வாய்பாட்டுச் சீராகவே கொள்ள வேண்டும். அப்போது மாமுன் நிரை வந்து இயற்சீர் வெண்டளை அமைந்து விடும்.

ஐகாரக் குறுக்கம் குற்றெழுத்துப் போல அலகு பெறும். --. -

“அன்னையை நோவ தவமால் அணியிழாய்

புன்னையை நோவன் புலந்து.’ அன்னையை, புன்னையை என்ற சீர்களில் இரண்டிரண்டு ஐகாரங்கள் வந்தன. அவை இரண்டு குறில்களைப் போல அலகு பெற்றுக் கூவிளச்சீராயின.

ஒற்றளபெடை ஓரலகுபெறும்.

“கண்ண் கருவிளை கார்முல்லை கூரெயிறு

பொன்ன் பொறிசுணங்கு போழ்வா யிலவம்பூ மின்ன் நுழைமருங்குல் மேதகு சாயலாள் என்ன் பிறமகளா மாறு.”

இந்தப் பாடலில் ஒவ்வோரடியிலும் முதற்சீரில் ஒற்றளபெடை, வந்தது. அதைக் கணக்குப் பண்ணா விட்டால் அந்தச் சீர்கள் ஓரசைச் சீராகவே இருக்கும். ப்போது நான்கு சீர்களும் தேமாவாக நின்று, வருஞ்சீர்

தலில் நிரை வர வெண்டளை அமைந்தது. -

o

“எஃஃகிலங்கிய வின்னுயிர்

வெஃஃகு வார்க்கில்லை வீடு.” இதில் எஃகிலங்கிய என்றும் வெஃகுவார்க் கில்லை என்றும் ஆயுதம் அளபெடுக்காமல் இருந்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/213&oldid=655815" இலிருந்து மீள்விக்கப்பட்டது