பக்கம்:கவி பாடலாம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலல &6ts 21.5

“மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்’

என்ற குறளில் வாழ்வார் என்ற சொல்லில் ஒரு பகுதி இரண்டாம் அடியின் இரண்டாம் சீரிலும் எஞ்சிய பகுதி மூன்றாம் சீரிலும் இருக்கின்றன. இப்படி வருவது வகையுளி. வகையுளி வருவது இலக்கணப்படி பிழை யன்று. ஆனால் அப்படி வராமல், வார்த்தைகள் சீருக்காக வெட்டுப்படாமல் இருப்பதுஅழகாக இருக்கும். பெருங் கவிஞர்களுடைய பாடல்களில் இந்த அழகு இருப்பதைக் காணலாம்.

எதுகை மோனைகள் உரிய இடத்தில் வரும்படி பாடுவது அவசியம். விதிக்கு விலக்காகச் சில இலக்கணங்கள் உண்டு. அவற்றையே இலக்கணமாகக் கொண்டு கவி இயற்றக் கூடாது. பழையவர்கள் பாட்டில் சிலவற்றை இலக்கணத்தோடு பொருத்திக் கொள்வதற்காக அமைந்தவை அந்த விலக்குகள்.

எழுத்து, சொல் ஆகிய இலக்கணப் பிழைகள் இல்லாமல் பாடுவது அவசியம். இப்போது கவிபாடும் சிலர் குற்றியலுகரத்தைப் பிரித்து வைத்துப் பாடுகிறார்கள். அது தவறு. அதை யதிவழு என்று சொல்வர்.

காதலனும் காதலியும் கண்டு உளமகிழ்ந்து ஆதரவில் வாழ்வர் அமைந்து. இந்தப் பாட்டில் கண்டு உளம் மகிழ்ந்து ஆதரவில் என்று அடுத்து வரும் சொற்களில் இரண்டிடங்களில் குற்றுகரம் பிரிந்தே நிற்கிறது. அவை புணர்ந்து கெட்டுப் போவதுதான் எழுத்திலக்கணத்தின்படி முறை. கண்டுள மகிழ்ந்தாதரவில் என்று சேர வேண்டும். அப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/216&oldid=655818" இலிருந்து மீள்விக்கப்பட்டது