பக்கம்:கவி பாடலாம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளும் இசைப்பாடலும் 217

ஒன்றும், நெடில் ஒன்றுமாக இருப்பதே காரணம். மைந்தா எனவே வழங்கு என்று மாற்றினால் எதுகை அமையும்.

எதுகை நயமும் மோனை நயமும் நன்கு அமைந் திருந்தால் கவிதை இனிய ஓசையுடள் விளங்கும். கம்பனுடைய பாடல்களில் இந்த அழகை நன்றாகப் பார்க்கலாம். இரண்டாம் எழுத்து மட்டும் ஒன்றினால் போதும் என்று எண்ணித் திருப்திப்படக் கூடாது. அதற்காகப் பொருத்தமில்லாத சொற்களையும் அமைக்கக் கூடாது.

சொல்வளம் இல்லாதவர்களுக்கு எதுகை மோனை அமைப்பதில் சங்கடம் உண்டாகும். அவை அமையச் சொற்களைத் தேடித் திண்டாடுவார்கள். கருத்தைச் சொல்வதற்கு ஏற்ற சொல்வளம் கவிதை பாடுபவர்களுக்கு மிகவும் இன்றியமையாதது. பனம் இல்லாதவன் அறம் செய்யப் புகுந்தது போல, வெறும் ஆசை மாத்திரம் இருந்தாற் போதாது. பல நூல்களைப் படித்துச் சொல்வளத்தைப் பெற வேண்டும்.

19. செய்யுளும் இசைப்பாடலும்

Tெதையும் செய்யுருளுருவத்தில் பாடி வைக்கும் பழக்கம் தமிழ் நாட்டில் பழங்காலந்தொட்டே இருந்து வருகிறது. அகராதியையே செய்யுள் வடிவத்தில் அமைத்து ‘விட்டார்கள் அல்லவா? நிகண்டுகள் எல்லாம் செய்யு ளுருவத்தில் உள்ள அகராதிகள் என்று சொல்வதில் தவறு இல்லையே! பாடம் பண்ணுவதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்தார்களேயன்றி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/218&oldid=655820" இலிருந்து மீள்விக்கப்பட்டது