பக்கம்:கவி பாடலாம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 8 கவி பாடலாம்

அதிலும் கவிச்சுவை சொட்ட வேண்டும் என்று எண்ணிச் செய்யவில்லை.

i செய்யுளுருவத்தில் கவிதைகளும் இருக்கும்; வெறும் செய்யுளும் இருக்கும். வெறும் செய்யுள் என்பது, உரைநடையில் எழுதுவதையே எதுகை, மோனையோடு செய்யுள் உருவத்தில் எழுதுவதுதான். பழங்காலத்தில் சோதிடம், மருத்துவம் முதலிய கலைகளைப் பற்றிய நூல்களும், இலக்கணங்களும் வெறும் செய்யுள்களால் ஆனவை. ஓரளவு தல புராணங்களும் அத்தகையனவே. அவற்றில் இடையிடையே சில நயங்களும் இருக்கலாம். அவற்றில் செய்திகளைச் சொல்லிவிட வேண்டும் என்ற குறிக்கோளே தலைமையானது.

பழங்காலத்துச் செய்யுட்களாக நமக்குக் கிடைக்கும் சங்க நூல்கள் கவிச்சுவை செறிந்தனவாகவே உள்ளன. பொருளின் ஆழமும் சொல்லின் அமைப்பும் சொல்லுகின்ற அழகும் சேர்ந்து சுவையை விளைவித்தன. சொல்ல வேண்டிய கருத்தைத் தடையின்றி அமைப்பதற்கு ஏற்றபடி மிடுக்கான உருவங்களை மேற்கொள்ளாமல் எளிய ஆசிரியப் பாக்களையே பாடினார்கள். வெண்பாக்களையும் பாடினார்கள். இந்த இரண்டின் தன்மையும் கலந்து அமைந்த பரிபாடல், கலிப்பா ஆகியவற்றைப் பாடினார்கள். அந்தப் பாடல்களில் கருத்தமைதியையே உயிராகக் கருதினார்கள்.

“சொல்லென்னும் பூம்போது தோற்றிப் பொருள்என்னும்

நல்லிருந் தீந்தாது நாறுதலால்-மல்லிகையின் வண்டார் கமழ்தாமம் அன்றே மலையாத தண்டாரான் கூடல் தமிழ்’

என்பது ஒரு பழம் பாடல். இதில் தமிழ்க் கவிதையை மணமுள்ள மாலையாகச் சொல்கிறார் புலவர். மலரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/219&oldid=655821" இலிருந்து மீள்விக்கப்பட்டது