பக்கம்:கவி பாடலாம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மோனை

- ஒரு குறிப்பிட்ட எழுத்து, ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் சீரின் முதலில் வந்தால் அதை மோனை என்று சொல்வார்கள். மோனை முத்தமிழ் மும்மத மும்பொழி, யானை’ என்று ஒரு புலவர் தம்மைக் கூறிக் கொண்டாராம். அதிலிருந்து மோனைக்கும் தமிழுக்கும் எவ்வளவு தொடர்பு உண்டென்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை என்று இலக்கண முறையில் சொல்வது வழக்கம். மோனையை அல்லிடரேஷன் (Alliteration) என்று ஆங்கிலத்திலும், பிராசம் என்று வடமொழியிலும் சொல்வார்கள்.

தமிழ்ச் செய்யுளில் ஒவ்வோர் அடியினுள்ளும் மோனை வருவது அழகு தரும். பழம் பாடல்களில் மோனை இராமல் இருக்கலாம். அதைக் கொண்டு மோனையே இல்லாமல் பாடினால் என்ன என்று சிலர் கேட்பார்கள். அலங்காரம் இல்லாமல் அழகாகத் தோற்றம் அளிக்கலாம், சிறந்த அழகியாக இருந்தால். ஆனால் அவர்களும் அணி செய்து கொள்கிறார்கள். ஆகவே, மோனை இருக்கும்படி பாடுவது பாட்டின் அழகை மிகுதிப் படுத்தும். கம்பன் முதலிய பெருங் கவிஞர்களுடைய வாக்கில் மோனை மிக நன்றாக அமைந்திருப்பதைக் காணலாம்.

க- என்ற எழுத்து அடியின் முதலில் வந்தால், அந்த அடியில் பின்னும் ஓரிடத்தில் அவ்வெழுத்து மோனையாக வரும். ஆங்கிலத்தில் க-என்பதற்குக் ககரவர்க்கம் முழு வதுமே மோனையாக வரலாம். தமிழில் க-வுக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/22&oldid=655822" இலிருந்து மீள்விக்கப்பட்டது