பக்கம்:கவி பாடலாம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளும் இசைப்பாடலும் 221

இழுத்து நிரப்பிவிடலாம் என்ற எண்ணத்தில் எழுந்தது அது. இப்போது கவிதையை எழுதுகிறார்கள். அவை எழுத்தில் வரும்போது மற்றவர்களுக்கு எப்படிப் படிப்பதென்றே தெரிவதில்லை. கோணலும் மாணலுமாக அரை குறை வரிகளை எழுதிவிட்டு, ‘இது கவிதை” என்று சொல் பவர்களும் இருக்கிறார்கள். அத்தகையவர்கள் தங்கள் கவிதையைத் தாங்களே பாடிக் காட்டினால்தான் அது கவிதையென்று சிறிது எண்ணத் தோன்றும்.

இசைத் தமிழ்ப் பாடல்களிலும் ஓசை மிகவும் முக்கியமானது. தாளத்துக்கு ஒத்து வரும்படி பாட வேண்டும். இயல் தமிழ்ப் பாடல்களில் ஒசையைச் சீர்களின் அமைப்பால் தெரிந்து கொள்ளலாம். இசைப் பாடல்களில் தாளத்தால் ஒசையமைதியைத் தெரிந்து கொள்ளலாம். தாளம் தவறினால் பாட்டுத் தவறு என்று சொல்லி விடலாம்.

பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற உறுப்புக் களையுடைய கீர்த்தனங்களை இப்போது சங்கீத வித்து வான்கள் பாடுகிறார்கள். இந்த வடிவத்தை உண்டாக்கித் தந்தவர் புரந்தரதாசர். அவர் காலத்துக்குப் பின்பே கீர்த்தனம் என்ற வகை பரவியது. அதற்கு முன் ஒரே மாதிரியான அடிகளே சாகித்தியங்களில் இருந்து வந்தன.

சாகித்தியங்களைச் சங்கீத வித்துவான்கள் உருப்படிகள் என்று சொல்வார்கள். பழங்காலத்தில் அவற்றையே தமிழ்ப் புலவர் உரு என்று சொல்லி வந்தார்கள்.

கீர்த்தனங்கள் தமிழில் திருக்குற்றாலக் குறவஞ்சி யிலேயே வந்துவிட்டன. அருணாசல கவிராயர் இராம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/222&oldid=655825" இலிருந்து மீள்விக்கப்பட்டது