பக்கம்:கவி பாடலாம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினா விடைகள் 223

விருத்தம் பாடுவதைவிடக் கீர்த்தனமோ இசைப் பாட்டோ பாடுவது எளிது என்று பலர் நினைக்கிறார்கள். அது சரியன்று. பொருளையும் பாவத்தையும் தாளத்தையும் நன்றாகக் கவனித்து, வார்த்தைகளை இயல்பாகப் பொருந்தும்படி செய்து, நல்ல ஆடையில் சரிகைக் கரை இருப்பது போல எதுகை மோனைகளைத் தக்க இடத்தில் வைத்துப் பாடினால் கீர்த்தனம் மிகவும் சிறப்பாக இருக்கும். அதைப் பார்த்தாலே நன்றாக அமைத்த வீணை மாதிரி அழகாக இருக்கும். பாடிவிட்டாலோ வீணையை மீட்டிப் பாடியது போன்ற இன்பத்தைத் தரும்.

20. வினா விடைகள்

1. ‘கும்பிட்டு வாழ்கிலே னியான் கூற்றையும் ஆடல் கொண்டேன்’ (கம்ப): இதில் மூன்றாம் சீரில் நிரையசை மட்டும் வருகிறதே:

  • “வாழ்கிலே னியான்’ என்று பிரிக்கக் கூடாது. அது அறுசீர் விருத்தம். ‘வாழ்கி லேனியான்’ என்று சீர் பிரிக்க வேண்டும். வாழ்கி-தேமா, ‘லேனியான்’ என்பதில் னி என்பது குற்றியலிகரம். அதற்கு ஓசை அளவு (அலகு) இல்லை. ஆகவே லேன்-யான்’ என்று இருந்தால் என்ன வாய்பாடோ அதையே அமைக்க வேண்டும். ஆதலின் அதுவும் தேமாவே ஆகும்.

2. ‘உணங்கினா னுயிரோ டியாக்கை யொருங்கினா னுரைசெய் தின்னும் ‘: மூன்றாம் சீர் புளிமாவாக வருகிறதே, சரியா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/224&oldid=655827" இலிருந்து மீள்விக்கப்பட்டது