பக்கம்:கவி பாடலாம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினாவிடைகள் 225

6.

ஐகாரத்தைத் தமது விருப்பம்போல் நெடிலாகவோ குறிலாகவோ கொள்ளலாம் போலும்!

சொல்லின் முதலில் ஐகாரம் வந்தால் அது பெரும்பாலும் நெடிலைப்போல அலகிடப் பெறும்.

‘பையர’ என்ற சீரைக் கூவிளம் என்றீர்கள். ‘வாழையடி, ஏழைபடும் முதலியவற்றைக் காய்ச்சீர் என்றீர்கள். வா-ழை யடி, ஏ-ழை-படும் என்று கனிச்சீராக அன்றோ கொள்ள வேண்டும்?

மொழி முதலில் வரும் ஐகாரம் ஐகாரக் குறுக்கமானாலும் அதற்கு ஒன்றரை மாத்திரை; ஆதலால் அதை நேராகவே கொள்ளுதல் பெரும்பான்மை. இடையில் வரும் ஐகாரம் குறில் போலவே ஒலிக்கும். வாழையடி என்பதும் வாழயடி என்பதும் ஒரே தன்மையின.

‘வசையென்ப வையத்தார்க் கெல்லாம்’ என்ற குறளில் ‘ஐ'காரம் இரண்டு மாத்திரை ஓசை உடையதாக ஆளப்பட்டுள்ளது. சொல்லில் வரும்போது ஐகாரம் ஒரு மாத்திரை ஓசைதானே?

‘வையத்தார்க் என்ற சீரைக் குறிப்பிட்டுக் கேட்ட கேள்வி இது. தன்னைச் சுட்டுகின்ற இடமன்றி மற்ற இடங்களில் ஐகாரம் தன் இரண்டு மாத்திரையில் குறுகும் என்பது எழுத்திலக்கண விதி. ஆனால், அப்படிக் குறுகுவதில் வேறுபாடு உண்டு. மொழிக்கு முதலில் குறுகும் போது ஒன்றரை மாத்திரையாக வரும். அங்கே ஐ என்பது அய் என்பது போல ஒலிக்கும். ஆதலால் குறிலும் ஒற்றும் இணைந்தது போல நேர் அசையாகக் கொள்ள வேண்டும்.

க. பா.-15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/226&oldid=655829" இலிருந்து மீள்விக்கப்பட்டது