பக்கம்:கவி பாடலாம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{i.

கவி பாடலாம்

ஐகாரம், ஒளகாரம் ஒரு மாத்திரையா, இரண்டு மாத்திரையா என்று சில வேளைகளில் ஐயம் ஏற்படுகிறது; தெளிவிக்க,

ஐகாரம் மொழிக்கு முதலில் வந்தால் பெரும்பாலும் நேரசையாக வரும். இடையில் வந்தால் குறில் போல இருக்கும். ஒளகாரம் முதலிலேயே வருவதால் ஒன்றரை மாத்திரையையும், நேரசையாகிய அலகும் பெறும்.

“எடுத்தெடுத்துப் டேனய் விளக்கயரும் பெற்றித்தே செம்பியன் சேனய் பொருத களம்.” (முத்தொள்ளாயிரம்)

இதில் சே-எய், பே-எய் என்று பிரித்தால் சரியே. ஆனால் எல்லாவற்றையும் இப்படியே பிரிக்க முடியுமா?

‘கடை கடையில் உப்போஒ எனவுரைத்து மீள்வா ளொளிமுறுவற் கொப்போநீர் வேலி யுலகு.”

இதில் கலித்தளை தட்டு வருகிறதே.

முதலில் உள்ள அளபெடைகள் செய்யுள் ஓசையை நிரப்புவதற்காகவே வந்தவை. ஆதலின், அவை அலகு பெறும். பின் உள்ளதோ பண்டமாற்றில் வந்தது. அது அலகு பெறாது. செய்யுளிசை அளபெடைகள் அல்லாதவை சில இடங்களில் அலகு பெற்றும், சில இடங்களில் அலகு பெறாதும் வரும்.

குற்றியலிகரம், குற்றியலுகரம், அளபெடைகள்எவ்வெப்போது அலகு காரியம் பெறா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/227&oldid=655830" இலிருந்து மீள்விக்கப்பட்டது