பக்கம்:கவி பாடலாம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 I6. கவி பாடலாம் “உறங்குவதுபோலுஞ் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்று பிரிக்க வேண்டும். வேல்பற்றும் கைக்குகேசன் மேதகைய தாமரைப்பூங் கால்பற்றிற் காண்போம் கதி. இந்தக் குறள் வெண்பாவில் பிழை ஏதேனும் உண்டா? முதலடியில் இரண்டாம் சீரில் இடையில் விளாஞ்சீர் வந்தமையால் ஓசை நீள்கிறது. குகே என்று குறில் நெடிலாகிய நிரை வந்தது. அப்படி வருவது தவறு. ஒரு சீரில் ஒரு நெடிலும், ஒரு குறிலும் வந்தால் தேமா என்று பிரிக்கலாமா? நெடில் முன்னும் குறில் பின்னும் வந்தால் அவை ஒவ்வொன்றும் நேரசையாம். இரண்டும் சேர்ந்தால் நேர் நேர்-தேமா ஆகும். ‘வாகு என்பது தேமா. ஆனால் குறில் முன்னும், நெடில் பின்னும் வந்தால் அது நிரையசை ‘குவா என்பது நிரையசை. சீரைப் பிரிப்பதில் சில குழப்பங்கள் ஏற் படுகின்றன. உதாரணமாக அவள் என்று இருந்தால் அவள் என்று பிரிப்பதா? அ-வள் என்று பிரிப்பதா? அவ-ள் என்று மெய்யைத் தனியே பிரிப்பது தவறு. யாப்பிலக்கணத்தில் மெய் கணக்கில் வருவதில்லை. அவள் என்பது நிரை என்னும் அசையாக வரும். எங்காவது இரு சீர்களில் ஒசை பிரியும்படி வந்தால் அ-வள் என்று பிரித்து ஒசையூட்ட வேண்டியிருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/229&oldid=655832" இலிருந்து மீள்விக்கப்பட்டது