பக்கம்:கவி பாடலாம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினா விடைகள் 235

46.

47.

ஆசிரிய விருத்தத்துக்குத் தளை காண வேண்டாமா?

வேண்டியதில்லை.

கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்திற்கு இறுதியாக எத்தனை சீரென்ற வரையறை இருக்கிறது?

பதினான்கு, பதினாறு வரையிலும் நூல்களில் பயிலும். இராமலிங்க சுவாமிகள் அருட்பாவில்தான் வேறு எங்கும் காணாத பெரிய விருத்தம் இருக்கிறது. அதில் ஒரடிக்கு 192 சீர்கள் இருக்கின்றன.

அகவற்பாவில் காய்ச்சீரும், கனிச்சீரும் கலந்து பயின்று வரலாமா?

விளங்கனிச்சீர் வருவதில்லை. மற்றக் கனிச் சீர்கள் மிகவும் அருமையாகவே வரும். காய்ச்சீர் அடியில் ஓரிடத்தில் மட்டும் வந்தால் சிறப்பாக இருக்கும்.

ஆசிரியப்பாவில் குற்றியலிகர உகரங்கள் வந்து விடத்து நாலசைச் சீர்கள் எப்போது வரும்?

ஆசிரியப்பாவின் இடையில் வஞ்சியடி கலக்கும் போது அவ்வாறு வரும்.

ஆசிரிய விருத்தத்தில் எந்தச் சீர்கள் வரலாம்?

பெரும்பாலும் மாச்சீரும், விளச்சீரும், காய்ச்சீருமே வருகின்றன. சில விருத்தங்களில் கனிச்சீரும் வருகிறது. எப்படி வந்தாலும் அளவொத்து வரல் வேண்டும்.

எண்சீரடி இயைபாடலில்

கணிச்சீர்வர லுண்டோ

என்றாலது வரும்வண்ணமிவ்

விருத்தத்தினிற் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/236&oldid=655840" இலிருந்து மீள்விக்கப்பட்டது