பக்கம்:கவி பாடலாம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48.

49.

கவி பாடலாம்

இந்தப் பாடலில் எட்டுச் சீர்கள் வருகின்றன. அரையடிக்கு மூன்று கணிச்சீர்களும் ஒரு மாச்சீரும் வந்திருப்பதைக் காண்க.

‘மலரின்மே லிருந்த வள்ளல்

வழுவிலா வரத்தி னானீ உலைவிலாத் தருமம் பூண்டா யுலகுள தனையு முள்ளாய்”

என்ற கம்ப ராமாயணப் பாட்டில், முதல் அடியின்

முதலில் காய்ச்சீர் வந்திருக்கிறதே!

விளச்சீர்தான் வர வேண்டும். ஆயினும் சில இடங்களில் காய்ச்சீர் வருவதுண்டு. இடையில் மெல்லின மும், இடையினமும் வரும்போது அவை விளச்சீரைப் போலவே ஒலிக்கும். மெல்லினத்தின் பின் வல்லினம் வந்தால் அப்படி ஒலிக்காது. ‘மலரின்மே என்பது புளி மாங்காய் என்ற வாய்பாடு உடையது. ஆனாலும் கருவிளம் என்பது போலவே ஒலிக்கிறது. சில பாடல்களில் ஒவ்வோர் அடியிலும் முதல் சீரில் காய்ச்சீர்கள் வருவதுண்டு.

“சேலுண்ட ஒண்க ணாரிற்

றிரிகின்ற செங்கா லன்னம் மாலுண்ட நளினப் பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை” என்பதில் அவ்வாறு வந்தது காண்க. வெண்பாவுக்கு ஒருவிகற்ப எதுகை, இரு விகற்ப எதுகை, மூவிகற்ப எதுகை என அமைப்பது போல விருத்தங்களுக்கும் அமைவது சரியா?

சரி அன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/237&oldid=655841" இலிருந்து மீள்விக்கப்பட்டது