பக்கம்:கவி பாடலாம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினா விடைகள் 237

50.

51.

விருத்தப்பாவில் மாச்சீர், விளச்சீர்களுடன் காய்ச் சீரும் கலந்து வரலாம் போல் தெரிகிறது. எனவே, காய்ச்சீர் வருவது போல் கனிச்சீரும் வரலாமா?

எது வந்தாலும் அளவொத்து அமைய வேண்டும். கணிச்சீர் வந்தாலும் ஒரடியில் அமைந்தவாறே பிற அடிகளிலும் இருக்க வேண்டும்.

தேமாங்கனி தேமாங்கனி தேமா தேமாங்கனி தேமாங்கனி தேமா

என்ற வாய்பாட்டில் வரும் ஆறுசீர் விருத்தங்கள் உண்டு.

அளவொத்து வரவேண்டிய ஆசிரிய விருத்தங் களில் காய் வரவேண்டிய இடத்தில் சில பாடல்களில் கணிச்சீர் வருகிறது.

‘துங்கமுறு பத்தர்பலர் புவிமீதுள்ளார்.”

(பாரதி அறுபத்தாறு) “மங்கும் மாலைப் பொழுதினிலே மதுவுண் சாலை வாயில்வழி’

(உமர்கய்யாம் பாடல்-தே.வி.மொழி பெயர்ப்பு)

“தமிழறியான் தமிழர்நிலை தமிழர்நெறி தமிழர்களின்

தேவை வாழ்வு.”

(தமிழியக்கம்-பாரதிதாசன்பாடல்கள்) இவற்றிற் கனிச்சீர்கள் வந்துள்ளன. வந்தது சரியா?

கனிச்சீராகத் தோன்றும் சீர்களில் உள்ள ரகர ஒற்றும் லகர ஒற்றும் அவ்விடங்களில் இல்லாதது போலவே எண்ணி வாய்பாடு கொள்ள வேண்டும். யரலவழள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/238&oldid=655842" இலிருந்து மீள்விக்கப்பட்டது