பக்கம்:கவி பாடலாம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோனை 23

எழுத்துக்குக் க-என்பது தான் மோனையாக வருமே பன்றிச் ச-என்பது வராது. இப்படி வரும் மோனை எழுத்துக்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அ | ஆ | ஐ | ஒள க - கா - கை - கெள ச - சா - சை - செள த - தா - தை - தெள ம - மா - மை - மெள

இப்படியே மற்ற எழுத்துக்களுக்கும் ஏற்றபடி நான்கு நான்கு எழுத்துக்கள் மோனையாக வரும். இவை அகரத்தோடு சேர்ந்த மோனை எழுத்துக்கள். இப்படி மூன்று தொகுதிகள் உண்டு.

அ ஆ | ஐ | ஒள $) — Fo – 61 – 61

உ - ஊ - ஒ | ஒ

- உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு. அவை நாலு நாலாகப் பிரிந்து மோனையாகப் பொருந்தி வரும். தனி உயிருக்குத் தனி உயிரே மோனையாக வேண்டும் என்பதையும், ஒரு குறிப்பிட்ட மெய்மேல் ஏறிய உயிருக்கு அதே மெய் மேல் ஏறிய உயிரே மோனையாக வரும் என்பதையும் மறக்கக் கூடாது.

இந்தப் பொதுவான விதியோடு, மெய்யெழுத் துக்களில் சில எழுத்துக்கள் ஒன்றற்கு ஒன்று மோனையாக வரும் என்ற சிறப்பு விதி ஒன்று உண்டு. ச-வுக்குத் த-வும், ஞ-வுக்கு ந-வும், ம-வுக்கு வ-வும் மோனையாக வரும். அதாவது ச்-என்ற மெய்யின் மேல் ஏறிய உயிருக்குத்-என்று மெய்யின் மேல் ஏறிய அதே உயிரோ, மோனைப் பொருத்த முள்ள உயிரோ வந்தால் மோனையாகும். அப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/24&oldid=655844" இலிருந்து மீள்விக்கப்பட்டது