பக்கம்:கவி பாடலாம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினா விடைகள் 239


55.

56.

57.

எல்லாச் செய்யுட்களுக்கும் அடிகள் அளவொத்து வர வேண்டும் என்பதில்லை. ஆசிரிய விருத்தங்களில் நான்கு அடிகளும் அளவொத்து வரவேண்டும் என்பதைப் பார்த்தோம். பொதுவாக விருத்தம் என்னும் பாவினங்கள் எல்லாவற்றிலும் அளவொத்த நான்கடிகளே வரும்.

56 சீர், 112 சீர் கொண்ட ஆசிரிய விருத்தங்கள் வருகின்றனவே!

வரலாம்.

ஆசிரிய விருத்தம் அளவொத்து வர வேண்டும் என்ற வரையறையின்றிப் புதிய முறையில் பாடலாமா?

அப்படிப் பாடினால் அது ஆசிரிய விருத்தம் ஆகாது. விருத்தம் என்ற பாவினங்கள் யாவுமே அளவு ஒத்து வரவேண்டும் என்பது பொது விதி.

எண்சீர் விருத்தத்தைப் போல அரையடிக்கு இரண்டு காயும் இரண்டு மாவும் வந்து ஈரடியான் வரும் பாவிற்கு என்ன பெயர்? பரணி நூல்களில் இத்தகைய செய்யுட்கள் வரும். அவை தாழிசை என்று பெயர் பெறும். கந்தர் அநுபூதிப் பாடல்களை இரண்டு விதமான பாடல்களாகச் சொல்கிறார்கள்; எது சரி? நான்கு சீராகப் பிரித்தால் கலிவிருத்தம் என்றும், மூன்று சீராகப் பிரித்தால் வஞ்சி விருத்தம் என்றும் சொல்லலாம்.

“வளைபட்டகை மாதொடு மக்களெனும் தளைபட்டழி யத்தகு மோதகுமோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/240&oldid=655845" இலிருந்து மீள்விக்கப்பட்டது