பக்கம்:கவி பாடலாம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

60.

கவி பாடலாம்

கிளைபட்டெழு குருர முங்கிரியும் தொளைபட்டுரு வத்தொடு வேலவனே” என்று பிரித்தால் வஞ்சி விருத்தமாகும். ஆனால் மோனை யமைதியைப் பார்த்தால் நான்கு சீராகப் பிரித்தலே பொருத்தம் என்று தோன்றும்.

“வளைபட் டகைமா தொடுமக் களெனும் தளைபட் டழியத் தகுமோ தகுமோ கிளைபட் டெழுகு ருரமும் கிரியும் தொளைபட் டுருவத் தொடுவே லவனே.”

இப்படிப் பிரிப்பதனால் பின் மூன்றடிகளிலும் மோனை நன்றாக அமைவதைக் காணலாம். -

அளவொத்த நான்கு சீர் அடிகள் நான்காய் வருவது கலிவிருத்தம் என்று கூறப்பட்டிருக்கிறது. நாலடி களால் வரும் தரவு கொச்சகக் கலிப்பாவும் நான்கு சீர்கள் கொண்ட வையே. எனின், இவ்விரு பாக்களுக்குமுள்ள வேறு பாடுகள் யாவை?

தரவு கொச்சகக் கலிப்பாவில் மாச்சீர், விளச்சீர் காய்ச்சீர் மூன்றும் விரவி வரும். மாச்சீர் வரும்போது வெண்டளை அமையும். நான்கு சீரும் காய்ச்சீராகவும் வரலாம். ஒரடியில் மாச்சீர் வந்த இடத்தில் மற்ற அடிகளில் மாச்சீரே வர வேண்டும் என்ற வரையறை இல்லை. கலிவிருத்தத்தில் அந்த வரையறை உண்டு. மூவகைச் சீர்களே நான்கு வருவது கலிவிருத்தத்துக்கு அமையாது.

காரிகை என்று கட்டளைக் கலித்துறையைச் சொல்கிறார்களே; எப்படி வந்தது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/241&oldid=655846" இலிருந்து மீள்விக்கப்பட்டது