பக்கம்:கவி பாடலாம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53.

கவி பாடலாம்

. யாவையும் தாமுள வாக்கலு

முயிர்கள் யாவு முடம்பை யெடுக்கவும் என்று பாடினால் கட்டளைக் கலிப்பாவின் அடியாகி விடுவதைக் காண்க. கட்டளைக் கலித்துறைக்கும், வெண்பாவுக்கும் சந்த அமைதி உண்டா? வேண்டுமானால் சந்தம் அமைத்துக் கொள்ளலாம். பின் முடுகு வெண்பா, முன்முடுகு வெண்பா, முழு முடுகு வெண்பா என வருபவற்றில் சந்தம் அமைந்திருப்பதைக் காணலாம். சங்ககால இலக்கியமாகிய பரிபாடல் நான்கு பாவினங்களில் எதைச் சார்ந்தது? பரிபாடல் என்பதே ஒரு வகைப்பா. அதன் இலக்கணம் தொல்காப்பியத்தில் இருக்கிறது. தாழிசை, துறை, விருத்தம் என்பவற்றில் நூல்களில் அதிகமாகப் பயில்பவை எவை? இனங்கள் மூன்றில் மிகுதியாக உள்ளது விருத்தம். வெளிவிருத்தம் மிகுதியாகக் காண்பதில்லை. வஞ்சி விருத்தம் ஓரளவு இருக்கும். ஆசிரிய விருத்தமும் கலி விருத்தமும் எல்லாவற்றைக் காட்டிலும் மிகுதியாக இருக்கும். - கலித்துறைப் பாடல்கள் பல நூல்களில் வருகின்றன. மற்றவை திவ்யப் பிரபந்தம், கலம்பகம் ஆகிய நூல்களில் ஒரோவிடத்தில் வந்துள்ளன.

செய்யுள் வகைகள் எத்தனை உள்ளன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/243&oldid=655848" இலிருந்து மீள்விக்கப்பட்டது