பக்கம்:கவி பாடலாம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கவி பாடலாம்

விதந்தரு கோடி இன்னல்

விளைந்தெனை யழித்திட் டாலும் சுதந்தர தேவி நின்னைத்

தொழுதிடல் மறக்கி லேனே’ என்ற பாட்டில் ஆறு சீர்கள் இருக்கின்றன. * புத்தகங்களில் கவிதையைப் பார்த்தால் அங்கங்கே இடம் விட்டு அச்சிட்டிருப்பார்கள். வசனத்தில் வார்த்தைக்கு வார்த்தை இடம் விட்டு அச்சிடுவார்கள். பாட்டில் அப்படி இராது. ஒசையைக் கவனித்து ஒவ்வொரு சீரையும் தனித்தனியே பிரித்து அமைத்திருப்பார்கள். அந்தச் சீர் முழு வார்த்தையாக இருக்கலாம்; இரண்டு சொற்களாகவும் இருக்கலாம்; அல்லது உடைந்த சொற்களாகவும் இருக்கலாம். சீர்களைப் பற்றி விரிவாகப் பின்னால் தெரிந்து கொள்ளலாம். இப்போதைக்கு அச்சுப் புத்தகங்களில் இடம் விட்டுச் சீரைப் பிரித்து அச்சிட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டால் போதும். அதைக் கவனித்தால் ஒரடியில் எத்தனை சீர்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம்.

மேலே சொன்ன, ‘இதந்தரு மனையி னிங்கி’ என்ற பாட்டு ஆறு சீர் உள்ள விருத்தம். அதை அறுசீர்க் கழி. நெடிலடி ஆசிரிய விருத்தம் என்று சொல்வார்கள். அதில்

அடிக்கு ஆறு சீர் உண்டு என்ற ஒன்றை மாத்திரம் இப்போது, நினைவில் வைத்துக் கொண்டால் போதும்.

இந்தப் பாட்டில் ஒவ்வோர் அடியிலும், முதல் சீரிலும் நான்காம் சீரிலும் மோனை அமைந்திருப்பதைக் காணலாம்.

“அரியானை அந்தணர்தம் சிந்தை யானை

அருமறையி னகத்தானை அணுவை யார்க்கும்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/27&oldid=655860" இலிருந்து மீள்விக்கப்பட்டது