பக்கம்:கவி பாடலாம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோனை 27

என்னும் தேவாரம் எண்சீர் விருத்தம். இங்கே முதல் சீரிலும் ஐந்தாம் சீரிலும் மோனை இருப்பதைக் கவனியுங்கள். இடையிலும் மோனைகள் வந்திருக்கின்றன. அவை வந்தாலும் வராவிட்டாலும், முதல் சீரிலும் ஐந்தாம் சீரிலும் வருவதுதான் முக்கியம்.

சில பாடல்களில் வெவ்வேறு ஒசையுடைய சீர்கள் வரும். அப்போது ஒசை மாறும் இடத்தில் மோனையை வைப்பார்கள்.

“எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பியசொல்

மருமத்தின் எறிவேல் பாய்ந்த புண்ணிலாம் பெரும்புழையில் கனல்நுழைந்தால்

எனச்செவியில் புகுத லோடும்”

என்ற பாட்டும் ஆறுசீர் விருத்தந்தான். ஆனால் இதில் முதல் நாலும் நீண்ட சீர்கள்; பின் இரண்டும் குறுகிய சீர்கள். ஒசை ஐந்தாம் சீரில் மாறுகிறது. அங்கே மோனை அமைந் திருக்கிறது.

மோனையை இப்படி உரிய இடத்தில் அமைத்தால் அழகாக இருக்கும் என்பதைச் சொல்லும் போது, எனக்கு ஒரு வரலாறு நினைவுக்கு வருகிறது. அதை என் ஆசிரியப்பிரானாகிய மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் சொன்னார்கள்.

ஐயரவர்களுக்கு முன் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக இருந்தவர் சி.தியாகராச செட்டியார் என்னும் புலவர். அவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் மாணாக்கர்; இலக்கணப் பெரும் புலவர். வேறு ஒரு புலவர் சில பாடல்களைப் பாடிக் கொண்டு வந்து அவரிடம் காட்டினார். செட்டியார் பாடலைப் பார்த்து, எதுகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/28&oldid=655861" இலிருந்து மீள்விக்கப்பட்டது