பக்கம்:கவி பாடலாம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கவி பாடலாம்

மோனை சரியாக அமைந்திருக்கின்றனவா என்று. கவனித்தார். சில அடிகளில் மோனை சிறப்பான இடங்களில் அமையாமல் இருப்பதைக் கண்டு, “இங்கே மோனை இல்லையே?’ என்றார். பாட்டுப் பாடின புலவர், வேறிடத்தில் உள்ள மோனையைக் காட்டி, ‘இதோ இருக்கிறதே!’ என்றாராம். அதைச் செட்டியார் கவனிக் காமலா இருப்பார்?

‘நெற்றியில் பொட்டு இட்டுக் கொள்ள வேண்டும் என்றால், எங்கே இட்டால் அழகாக இருக்குமோ அங்கே இடாமல், புருவத்துக்கு மேலே ஒரமாக இட்டுக் கொண்டு, ‘இதோ நெற்றியில்தானே பொட்டு வைத்துக் கொண்டிருக்கிறேன்? என்று சொல்வது போல இருக்கிறது, நீர் சொல்வது. எங்கே வைத்தாலும் மோனைதான் என்று இலக்கணம் சொன்னாலும், இப்படி வைத்தால் அழகு என்று இலக்கியங்கள் காட்டுகின்றனவே! அதை நீர் கவனிக்கவில்லையோ? ‘ என்று தியாகராச செட்டியார் கூறிப் பாட்ட்ைத் திருத்தச் சொன்னாராம்.

ஆகவே, மோனையை உரிய இடத்தில் வைப்பது மிகவும் முக்கியம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

4. அடியும் .

எதுகையும் மோனையும் பாட்டுக்கு அழகு தருபவை. ஆனால் செய்யுட்களுக்கு உயிராக இருப்பது ஒசை. ஒசை தவறினால் அது பாட்டே ஆகாது. ஆகையால் கவிதையின் ஒசையில் இருக்கும் ஒழுங்கைத் தெரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது. ஒசையைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/29&oldid=655862" இலிருந்து மீள்விக்கப்பட்டது