பக்கம்:கவி பாடலாம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியும் ஓசையும் - 29

காதினால் உணர்வதுதான் முறை. அதற்காகப் பல பழம். பாடல்களைப் பாடிப் பாடிப் பழக வேண்டும் என்பதை முன்பே தெரிவித்திருக்கிறேன்.

ஒசையின் பகுதிகளையும், ஒவ்வொரு வகைச் செய்யுளுக்கும் தனித் தனியே அமைந்துள்ள ஓசைகளையும் பற்றி அடியிலிருந்து ஆரம்பித்துச் சொல்லிவந்தால் அசை, சீர், தளை, தொடை, அடி என்பவற்றைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கும். அதற்கு அசல் இலக்கணத்தையே படித்து விடலாம். அது அவ்வளவு எளிதில் புரிகிறதில்லை என்று தானே, இந்தக் கட்டுரைகளை எழுதும் முயற்சி தொடங்கியது?

ஒசையைப் பற்றிப் பொது வகையில் சொல்லுவதை விட ஒரு பாட்டை எடுத்துக் கொண்டு அதில் ஒசை எப்படி அமைந்திருக்கிறது என்பதைத் தெளிய வைப்பது எளிது. முதல் முதலில் எல்லோருக்கும் பழக்கமான பாட்டை எடுத்துக் கொண்டு ஒசையைக் கவனிப்போம்:

“இதந்தரு மனையி னிங்கி

யிடர்மிகு சிறைப்பட் டாலும் பதந்திரு விரண்டு மாறிப்

பழிமிகுத் திடருற் றாலும் விதந்தரு கோடி யின்னல்

விளைந்தெனை யழித்திட்டாலுஞ் சுதந்தர தேவி நின்னைத்

தொழுதிடன் மறக்கி லேனே.” இந்தப் பாட்டில் ஒவ்வோரடியிலும் ஆறு சீர்கள் இருக்கின்றன. இந்தப் பாட்டு ஆசிரிய விருத்தம் என்னும் வகையைச் சார்ந்தது. ஆறு சீரையுடைய ஆசிரிய விருத்தம் ஆதலின் அறு சீரடி ஆசிரிய விருத்தம் என்று பெயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/30&oldid=655864" இலிருந்து மீள்விக்கப்பட்டது