பக்கம்:கவி பாடலாம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியும் ஓசையும் 31

விருத்தம்; இத்தனையையும் சேர்த்து அந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள். இப்படியே, எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்று விருத்தங்களுக்குப் பெயர் வழங்குவதை அச்சுப் புத்தகங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

நாலு சீருக்குக் குறைவான சீர்களைக் கொண்ட இரண்டு சீரடி, மூன்று சீரடி என்று இரண்டு அடி வகை உண்டு. இரண்டு சீரடி குட்டையானது; மூன்று சீரடி அதை விடச் சிறிது நீண்டது. நாற்சீரடியை நோக்க அதுவும் சிறிய அடிதான். மிகவும் குட்டையான உருவத்தைக் குறள் என்றும், சற்றே உயர்ந்து, ஆனால் சராசரி அளவுக்குக் கீழே இருந்தால் சிந்து என்றும் சொல்வது வழக்கம். குறள், சிந்து, அளவு, நெடில், கழிநெடில் என்ற ஐந்தும் உயரத்தின் கூடுதல் குறைவினால் வந்த பெயர்கள். அந்தப் பெயர் களையே அடிகளுக்கும் வைத்திருக்கிறார்கள். இரண்டு சீரடிக்குக் குறளடி என்று பெயர்; மூன்று சீரடிக்குச் சிந்தடி என்று பெயர்.

ஆகவே, ஐந்து வகையான அடிகளைச் சீரின் கணக்கினால் வரையறை செய்திருக்கிறார்கள்.

2 சீர் அடி - குறள் அடி 3 சீர் அடி - சிந்தடி 4 சீர் அடி - அளவடி 5 சீர் அடி - நெடிலடி 6 சீர் அடி முதலான அடிகள் - கழிநெடிலடிகள் ஆசிரிய விருத்தங்களில் ஆறு சீர் அடி முதலியவை - களே வரும்; அதாவது, கழிநெடிலடியே வரும்.

முன்னாலே காட்டிய பாட்டில் உள்ள நான்கு அடிகளும் ஆறு சீர் அடிகளாகவே இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/32&oldid=655866" இலிருந்து மீள்விக்கப்பட்டது