பக்கம்:கவி பாடலாம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியும் ஓசையும் 33

‘மனையி னிதந்தரு நீங்கிச்

சிறைப்பட் டிடர்தரு டாலும்.”

ஓசை எவ்வளவு வேறுபடுகிறது பாருங்கள். ஆனால் இந்த அடியின் முன்பகுதியைப் பின்னாகவும் பின்பகுதியை முன்னாகவும் வைத்துப் பாருங்கள். -

“இடர்மிகு சிறைப்பட்டாலும்

இதந்தரு மனையி னிங்கி.” இப்போது ஒசைமாறுவதாகத் தெரியவில்லை. ஆகவே முன் உள்ள பாதி அடியும், பின்னுள்ள பாதி அடியும் ஒரே மாதிரி ஒசை உள்ளவை என்றும் இந்த அரையடியில் உள்ள மூன்று சீர்களும் வெவ்வேறு ஓசை உடையவை என்றும் அறிந்து கொள்ளலாம். சீர்களின் இடம் மாறினால் அடியின் ஓசையே மாறி விடுகிறது.

இனி இரண்டாவது அடியைப் பார்க்கலாம்.

‘பதந்திரு விரண்டு மாறிப்

பழிமிகுத் திடருற் றாலும்.’ இதற்கும் முன்பு போல ஒசைக்கு ஒரு வாய்பாட்டைச் சொல்லிப் பார்த்தால் முதலடியின் வாய்பாடாகவே இருப்பதைக் காணலாம்.

தனதன தனன தான

தனதன தனன தான திருப்புகழ்ப் பாட்டுக்களில் வரும் சந்தக்குழிப்பிலும் தனதன, தான என்றெல்லாம் இருக்கும்; அங்கே ஓசையை அளக்கும் முறை வேறு; இங்கே நாம் சொல்வது வேறு. அதையும் இதையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

தனதன தனன தான

க. பா.-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/34&oldid=655868" இலிருந்து மீள்விக்கப்பட்டது