பக்கம்:கவி பாடலாம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கவி பாடலாம்

என்ற அரையடியில் சிறிது மாற்றம் உண்டு பண்ணிப் பார்க்கலாம்.

தனதன தான தான இதில் இரண்டாவது சீரில் கொஞ்சம் மாற்றம் இருக்கிறது.

அதனால் ஓசை மாறுகிறதா என்று திருப்பித் திருப்பிச் சொல்லிப் பாருங்கள்.

தந்தர தேவி நின்னைத்

தொழுதிடல் மறக்கிலேனே

என்ற நாலாவது அடியைப் பாருங்கள். அதற்கு ஒசை வாய்பாட்டை ஊட்டினால்,

தனதன தான தான .

தனதன.தனன தான

என்று வரும்.

முதல் பகுதியில் இரண்டாவது சீராகிய தேவி என்பதற்குத் தான என்று வாய்ப்பாடு அமைக்க வேண்டும். தண்ன வேறு, தான வேறு; ஆனாலும் இந்த இரண்டாவது சீரில் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் ஒசை மாறவில்லை.

திருப்பித் திருப்பி இந்தப் பாட்டைப் படியுங்கள். பிறகு பாட்டையே மறந்து விடுங்கள். -

அடியில் முன் கண்ட வாய்பாட்டோடு சில சீர்களில் மாறுபட்ட ஒசைகளைக் கொண்ட ஒர் அமைப்பைக் காணலாம்.

தனதன தான தான

தனதன தனன தான

தனதன தனன தான

தனதன தான தான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/35&oldid=655869" இலிருந்து மீள்விக்கப்பட்டது