பக்கம்:கவி பாடலாம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கவி பாடலாம்

சொல்லிப் பார்த்துக் கொண்டு, பிறகு அந்த ஒசைக்கு ஏற்ற வார்த்தைகளை ஒவ்வொன்றாக அமைத்துப் பாருங்கள். அப்படி அமைக்கும் போது மோனை வர வேண்டிய சீராக இருந்தால் மோனை வைக்க மறந்து விடக் கூடாது.

முதலடிக்கு மாத்திரம் சில விடைகளைக் குறிக்கிறேன். நான்காவது சீரில் தானன என்ற ஒசையாவது தனதன என்ற ஒசையாவது அமையலாம்; ஆனால் சி, சீ, செ, சே, தி, தீ, தெ, தே என்ற எட்டு எழுத்துக்களில் ஏதாவது ஒன்றை முதலாக உடைய சொல்லே வர வேண்டும்; அப்போதுதான் மோனை அமையும்.

அந்தச் சீரில் பின்வரும் வார்த்தைகள் வந்தால் பொருளும் ஒட்டும்; மோனையும் அமையும்.

(1) சிறப்பினின், (2) சிறப்புற, (3) திருந்த, (4) திருத்தமாய், (5) சீரிய, (6) செம்மையாய், (7) சீர்பெற, (8) திருவுற, (9) திகழ, (10) திகழ்தர.

இன்னும் பலவற்றை இணைக்கலாம். இவை போதும். இவற்றில் திருந்த, திகழ என்னும் இரண்டையும் இணைத்துப் பார்த்தால் ஒசை சரியாக வராது. மற்றவை சரியாக வரும். மற்ற அடிகளையும் நிறைவுறுத்திப் பாருங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/37&oldid=655871" இலிருந்து மீள்விக்கப்பட்டது