பக்கம்:கவி பாடலாம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்பாடுகள் 45

மூவசைச் சீர்களுக்குரிய வாய்பாடுகள் வருமாறு:

நேர் நேர் நேர் - தேமாங்காய் நிரை நேர் நேர் - புளிமாங்காய் நேர் நிரை நேர் - கூவிளங்காய் நிரை நிரை நேர் - கருவிளங்காய் நேர் நேர் நிரை - தேமாங்கனி நிரை நேர் நிரை - புளிமாங்கனி நேர் நிரை நிரை - கூவிளங்கனி நிரை நிரை நிரை - கருவிளங்கணி. இந்தச் சீர்களில் நேர் ஈற்றுச் சீர்களைக் காய்ச்சீர் என்று சொல்வார்கள். காய்ச்சீர் என்று சொன்னாலே அது மூவசைச் சீர் என்பதும், நேரை ஈற்றிலே உடையது என்பதும் புலனாகும். நிரை ஈற்றுச் சீர்களைக் கனிச்சீர் என்று

சொல்வார்கள். - ------ -

நாலசைச் சீர்களின் வாய்பாடு வருமாறு:

நேர் நேர் நேர் நேர் - தேமாந்தண்பூ நிரை நேர் நேர் நேர் - புளிமாந்தண்பூ நேர் நிரை நேர் நேர் - கூவிளந்தண்பூ நிரை நிரை நேர் நேர் - கருவிளந்தண்பூ நேர் நேர் நிரை நேர் - தேமாநறும்பூ நிரை நேர் நிரை நேர் - புளிமாநறும்பூ நேர் நிரை நிரை நேர் - கூவிளநறும்பூ நிரை நிரை நிரை நேர் - கருவிள நறும்பூ இவை எட்டும் பூச்சீர்கள்.

நேர் நேர் நேர் நிரை - தேமாந்தண்ணிழல் நிரை நேர் நேர் நிரை - புளிமாந்தண்ணிழல் நேர் நிரை நேர் நிரை - கூவிளந்தண்ணிழல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/46&oldid=655881" இலிருந்து மீள்விக்கப்பட்டது