பக்கம்:கவி பாடலாம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 - கவி பாடலாம்

நிரை நிரை நேர் நிரை - கருவிளந்தண்ணிழல் நேர் நேர் நிரை நிரை - தேமாநறுநிழல் நிரை நேர் நிரை நிரை - புளிமாநறுநிழல் நேர் நிரை நிரை நிரை - கூவிளநறுநிழல் நிரை நிரை நிரை நிரை - கருவிளநறுநிழல்.

இவை எட்டும் நிழற்சீர்கள். பூச்சீர் என்றால் அது நாலசைச்சீர் என்றும், நேர் என்ற இறுதியை உடையது என்றும் தெளி வாகும். நிழற்சீர் என்றால் நாலசைச் சீர் என்றும், நிரை என்ற உறுதியை உடையது என்றும் புலனாகும். நாலசைச் சீருக்குமேல் சீர்கள் இல்லை. அதாவது எந்தப் பாட்டா னாலும் ஒரு சீரில் நான்கு அசைகளுக்கு மேல் வருவதில்லை.

“இதந்தரு மனையி னிங்கி ‘ என்ற பாட்டுக்கு இப்போது சொன்ன வாய்பாடுகளை அமைத்துப் பார்க்கலாம்.

இதந்தரு மனையி னிங்கி

கருவிளம் புளிமா தேமா இடர்மிகு சிறைப்பட்டாலும்

கருவிளம் புளிமா தேமா பதந்திரு இரண்டு மாறிப்

கருவிளம் புளிமா தேமா பழிமிகுத் திடருற் றாலும்

கருவிளம் புளிமா தேமா விதந்தரு கோடி யின்னல்

கருவிளம் தேமா தேமா சுதந்தர தேவி நின்னைத்

கருவிளம் தேமா தேமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/47&oldid=655882" இலிருந்து மீள்விக்கப்பட்டது