பக்கம்:கவி பாடலாம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்பாடுகள் 47

விளைந்தெனை அழித்திட டாலும்

கருவிளம் புளிமா தேமா

தொழுதிடல் மறக்கி லேனே.

கருவிளம் புளிமா தேமா.

இந்த வாய்பாடுகளைக் கூர்ந்து பாருங்கள். ஒவ்வோர் அரை அடியிலும் உள்ள முதல் சீர், அதாவது அடியின் முதல் சீரும் நான்காம் சீரும் விளச்சீராகவே இருத்தலைக் காணலாம். விளச்சீர் என்பது நிரை அசையை இறுதியில் உடைய ஈரசைச்சீர். அரை அடியில் இரண்டாம் சீரும் மூன்றாம் சீரும் மாச்சீர்களாகவே இருக்கின்றன. ஆனால் இரண்டாம் சீரில் தேமாவும் புளிமாவும் வருகின்றன. மூன்றாம் சீரோ தேமாச்சீராகவே வருகிறது. இதை நன்றாகக் கவனிக்க வேண்டும். பாட்டின் ஓசையைக் கவனித்துக் கவி எழுதுங்கள். பிறகு வாய்பாட்டைப் புகுத்திப் பார்த்தால் இந்த முறையில் இருப்பதை அறியலாம்.

ஆகவே, இந்த அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் அரையடியில் முதல் சீர் விளச்சீராகவும், இரண்டாம் சீர் மாச்சீராகவும், மூன்றாம் சீர் தேமாச்சீராகவும் இருக்கின்றன என்று முடிவு கட்டிவிடலாம். இந்தப் பாட்டில் முதல் சீரும் நான்காம் சீரும் கருவிளமாகவே இருக்கின்றன. எதுகை வர வேண்டும் என்பதால் முதல் சீர் நான்கு அடியிலும் ஒத்தே வர வேண்டும். அங்கே யாவும் கருவிளமாக வந்தன. ஆனால் நான்காம் சீரில் அந்த நிர்பந்தம் இல்லை. கருவிளம், கூவிளம் என்ற இரண்டில் எது வேண்டுமானாலும் வரலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/48&oldid=655883" இலிருந்து மீள்விக்கப்பட்டது