பக்கம்:கவி பாடலாம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுசீ விருத்தங்கள் 51

எந்நாட்டும் பெறற்கரிய பெருஞான பீடமென

இருக்கும் நாடு

முன்னாட்டும் நான்மறையும் உபநிடதப் பெருநூலும் முயன்று கற்றுப் -

பின்னாட்டும் நூல்களெலாம் பயின்றறிவு பெற்றுணர்ந்து

பீடு சான்ற -

நன்னாட்ட முடையவனு பவிகளுள நாடிதுபோல்

நவில வுண்டோ?

இதுவும் ஒரு வகை அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம். இதில் உள்ள அடியைப் பாதியிலே வெட்டி மடிக்க முடியாது; அதாவது முதல் மூன்று சீரைப் போலவே பின் மூன்று சீரும் இருக்கும் வகையைச் சார்ந்தது அன்று. இதில் முதன் நான்கு சீர்களும் காய்ச்சீர்கள்; பின் இரண்டும் மாச்சீர்கள். -

எந்நாட்டும் பெறற்கரிய பெருஞான பீடமென

இருக்கும் நாடு - தேமாங்காய் கருவிளங்காய் புளிமாங்காய் கூவிளங்காய்

புளிமா தேமா.

இவ்வாறே மற்ற அடிகளுக்கும் வாய்பாடு ஊட்டிக் காண்க. முதல் நான்கு சீர்களும் நேரீற்று மூவசைச் சீர்கள். அவை ஒரோசையாக உள்ளன. பின் இரண்டும் நேரீற்று ஈரசைச்சீர்கள். அவை வேறு ஒசை. நான்காவது சீரில் ஒசை மாறும் இடத்தில் மோனை அமைந்ததைக் கவனிக்க வேண்டும்.

இதில் முதல் நான்கு சீர்களிலும் காய்சீர்களில் எதுவும் வரலாம். அவை நான்கு என்பது உங்களுக்குத் தெரிந்தது தானே? பின் இரண்டு சீர்களில் ஐந்தாம் சீரில் புளிமா, தேமா என்னும் இரண்டு வரலாம். ஆறாம் சீர் தேமா, நேர்நேர் ஆக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/52&oldid=655888" இலிருந்து மீள்விக்கப்பட்டது