பக்கம்:கவி பாடலாம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கவி பாடலாம்

வரும். “இதந்தரு மனையி னிங்கி” என்ற பாட்டில் 3,6 ஆகிய இரண்டும் தேமாச் சீராகவே வரும் என்பதை முன்பு பார்த்தோம். -

- இந்த விருத்தத்தை ஒரடிக்கு நான்கு காயும், இரண்டு மாவும் வரும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்று அடையாளம் கூறித் தெரிந்து கொள்ளலாம்.

இது வரையில் நாம் தெரிந்து கொண்ட மூன்று வகை அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களாவன: 1. அரையடிக்கு ஒரு விளமும், இரு மாவும் வருவன. 2. அரையடிக்கு இரு மாவும், ஒரு காயும் வருவன. 3. ஒரடிக்கு நாலு காயும், இரு மாவும் வருவன. ஆறு சீர்களும் மாச்சீராகவே வரும் பாடல்களும் உண்டு.

ஆறு சீரு மாவாய்

அமையும் அடிகள் கொண்ட வேறு பாட்டு முண்டு

விளம்பின் நான்காஞ் சீரில் கூறு மோனை வந்தால்

குலவும் அழகு சாரும் தேறும் விளம்வா ராமல்

சிந்தை கொள்ள வேண்டும். இது அத்தகையது.

இன்னும் பல வகையில் ஆறு சீர்களை அமைத்து விருத்தங்களைப் பாடியிருக்கிறார்கள் புலவர்கள். எல்லா வற்றிலும் ஓரடி எப்படி வருகிறதோ அவ்வண்ணமே மற்ற அடிகளும் அளவொத்து வரும். . - ;

‘உருகாத நீச ராயினும்

உணராத மூட ராயினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/53&oldid=655889" இலிருந்து மீள்விக்கப்பட்டது