பக்கம்:கவி பாடலாம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்சீர் விருத்தம் 57

இந்தப் பாட்டில் ஒவ்வோரடியிலும் எட்டுச் சீர்கள் இருக்கின்றன. அரையடியில் முன் இரண்டு சீரும் காய்ச்சீர்கள்; நேரை இறுதியில் உடைய மூவசைச் சீர்கள். பின் இரண்டு சீரும் மாச்சீர்கள்; நேரை இறுதியிலே உடைய ஈரசைச்சீர்கள். ஆனால் ஒவ்வோர் அரையடியிலும் உள்ள நான்காவது சீர்தேமாவாகவே-நேர் நேராகவே இருப்பதைக் கவனிக்க வேண்டும்; அங்கே திரை நேர் அல்லது புளிமாச்சீர் வந்தால் ஓசை கெட்டு விடும். பாட்டைப் படிக்கும் போது அங்கே புளிமா இருந்தால் வேறுபாடான ஓசை உண்டாதலைக் கவனிக்கலாம்.

தேவாரத்தில் அப்பர் சுவாமிகள் பாடிய திருத் தாண்டகப் பாக்களில் பெரும்பாலன எண் சீரடி விருத் தங்களாகவே இருக்கும்; சில இடங்களில் ஓசை கூடியும் இருக்கும்; குறைந்தும் இருக்கும். தாண்டகம் என்ற பெயரோடு வரும் பாடல் அது. அதற்குரிய இலக்கணம் இப்போது வழக்கில் இல்லை. * . .

“சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து

தரணியொடு வானாளத் தருவரேனும் மங்குவா ரவர்செல்வம் மதிப்போ மல்லோம்

மாதேவர்க் கேகாந்தரல்ல ராகின்; அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்

ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க்கன்பராகில்

அவர்கண்டீர் யாம்வணங்கும் கடவு ளாரே.” இந்தப் பாடலில் மூன்றாம் அடியில் முதல் பாதியில் நான்காம் சீர் யராய் என்று இருக்கிறது. எழுத்துக் கணக்கைக் கொண்ட தாண்டகப் பாட்டின் இலக்கணப்படி இந்த அடி சரி. ஆனால் இப்போதெல்லாம் இந்த முறைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/58&oldid=655894" இலிருந்து மீள்விக்கப்பட்டது