பக்கம்:கவி பாடலாம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை பாடும் ஆசை இருக்கும் அளவுக்கு அதன் இலக்கணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை. எதுகை, மோனை களைத் தெரிந்து கொண்டு ஏதோ ஒரு வகையாகப் பாடல்களை எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பி, அவை வெளிவருவதை எதிர்நோக்கி ஆவலோடு காத்திருக்கும் உள்ளங்கள் பல. செய்யுளின் இலக் கணத்தைத் தெரிந்து கொள்ளும் பொறுமை பலருக்கு இருப்பதில்லை. எளிதிலே தெரிந்து கொள்ளும்படி அதைச் சொல்லுகிறவர்களும் இல்லை. எல்லாருமே யாப்பருங்கலக் காரிகையைப் படித்துக் கவிபாடக் கற்றுக் கொள்வதென்பது இயலாத காரியம்.

இந்த நிலையில், கவிபாடும் முறையை ஓரளவில் எளிதாகத் தெரிவிக்கும் கட்டுரைகளை எழுதினால் பலர் பயன் பெறக் கூடும் என்று எண்ணினேன். இளமை முதல் கவிபாடும் பழக்கம் உள்னவனாதலின், நான் எவ்வாறு தொடங்கிப் பயின்று எழுத முடிந்ததோ, அந்த முறையில் கட்டுரைகளை எழுதலானேன்.

‘மஞ்சரி'யில் இந்தக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். 1959-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி 1961-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் இவற்றை எழுதினேன். இவற்றைப் படித்தவர்களிற் பலர் தம்முடைய ஐயங்களை எழுதினார்கள். -

கட்டுரைகளுக்குப் பின் அன்பர்கள் கேட்ட வினாக்களுக்குரிய விடைகளை மாதந்தோறும் எழுதி வந்தேன். பலர் புதிய செய்யுட்களை எழு தி யனுப்பினார்கள். அவற்றில் சிலவற்றைத் தேர்ந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/6&oldid=655896" இலிருந்து மீள்விக்கப்பட்டது