பக்கம்:கவி பாடலாம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்சீர் விருத்தம் 59

இந்த எண்சீர் விருத்தத்திலும் ஐந்தாவது சீரில் மோனை அமையும்.

வேறு வகையான எண்சீர் விருத்தங்களும் உண்டு. அவை அருமையாகவே நூல்களில் வந்துள்ளன.

அலையோ டியநெஞ் சினிலே துயரால்

அயர்வே னையரு ளருளிப் புவியில்

மலைவோ டொருசஞ் சலமும் பிறவா

வகையில் குலவும் படிவைத் தருள்வாய்

இலையோடியசெவ் வயில்வே லவனே

இமையோர் நலவாழ் வடையச் சமரில்

குலையோ டசுரர் ஒழியப் பொருதாய்

குமரா அமரா பதிகா வலனே.

இது ஒருவகை எண்சீர் விருத்தம். இதில் எல்லாச் சீர்களும் புளிமாச்சீராகவே அமைந்திருக்கின்றன. பொது வாகவே, ஆசிரிய விருத்தங்களில் புலவர்கள் தம்முடைய கற்பனைத் திறத்தால் பல வகையான உருவங்களைப் படைத்திருக்கிறார்கள்; இனியும் படைப்பார்கள். ஆசிரிய விருத்தங்களைப் பாடிப் பழக வேண்டுமானால் கம்பராமாயணத்தையும் வில்லிபாரதத்தையும் அடிக்கடி படித்து வாயாரப் பாடிப் பழக வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/60&oldid=655897" இலிருந்து மீள்விக்கப்பட்டது