பக்கம்:கவி பாடலாம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. அகவல்

ஓசையே பாட்டின் உருவத்தைச் செவ்வை ஆக்குகிறது. பழகிய காதுக்குப் பாட்டைக் கேட்ட மாத் திரத்தில், தவறு இருந்தால் உடனே புலப்படும். பாட்டுக்குச் சரியான உரைகல் பாட்டுக் கேட்டுப் பயின்ற காது. அதனால் தான் கவி பாடப் புகுகிறவர்கள் பல பாடல்களை வாயாரப் பாடிப் பழக வேண்டுமென்று சொல்கிறேன். பொருள், இலக்கணம் ஆகியவற்றைப் பின்பு கவனித்துக் கொள்ள லாம். ஒசை சரியாக இருந்தால் இலக்கணமும் சரியாக இருக்கும். கவியின் ஒசையை விருத்தத்தில் தெளிவாகக் காணலாம். அதனால்தான் ஆசிரிய விருத்தங்களைப் பற்றியே இதுவரையில் எழுதி வந்தேன்.

தமிழில் பாக்கள் நான்கு வகைப்படும். அவற்றை நாற்கவி யென்று சொல்வார்கள். வெண்பா, ஆசிரியப்பா கலிப்பா, வஞ்சிப்பா என்பவை அவை. யாப்பிலக்கண நூல்களில் அந்த வரிசையில் இலக்கணத்தைச் சொல்லி யிருப்பார்கள். பாவுக்கு இனமாகச் சில பாடல்கள் உண்டு. அவற்றைப் பாவினம் என்று புலவர் கூறுவர். அவை தாழிசை, துறை, விருத்தம் என்று மூன்று வகை. ஒவ்வொரு பாவுக்கும் இந்த மூன்று இனங்களும் உண்டு. இதுவரையில் நாம் கவனித்தவற்றின் பெயரே அவை இன்ன பர்வின் இனம் என்பதை உணர்த்தும். ஆசிரியப்பாவின் இனமா தலின் ஆசிரிய விருத்தம் என்று பெயர் வந்தது. பிற்காலத்துக் காப்பியங்களிலும் பிற வகை நூல்களிலும் புலவர்கள் பெரும்பாலும் ஆசிரிய விருத்தங்களையே ஆண்டிருக் கிறார்கள். தேவார காலத்துக்குப் பிறகு காவியகாலம் தொடங்கியது. அது முதல் கவிதையுலகில் ஆசிரிய விருத்தமே அரசாட்சி செய்து வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/61&oldid=655898" இலிருந்து மீள்விக்கப்பட்டது