பக்கம்:கவி பாடலாம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகவல் 63

‘நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று கருவிளம் புளிமா கூவிளம் புளிமாங்காய் நீரினு மாரள வின்றே சாரல் • , கூவிளம் கூவிளம் தேமா தேமா கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு புளிமா புளிமா தேமாங்காய் பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே புளிமா புளிமா கூவிளங்காய் தேமா.

இந்த ஆசிரியப்பாவில் கூவிளம், கருவிளம், தேமா, புளிமா என்ற நான்கு ஈரசைச் சீர்களும் வந்தன. மூன்று இடங்களில் காய்ச்சீர்கள் வந்தன. முதல் அடியில் நான்காம் சீரும், மூன்றாம் அடியிலும் கடைசி அடியிலும் மூன்றாம் சீரும் காய்ச்சீராக அமைந்ததைக் காண்க. -

இரண்டு இரண்டு அடிகளில் எதுகை அமைந்தால் ஆசிரியப்பா அழகாக அமையும்.

அகவற் பாக்க ளவைந்ான் காகும்; தகநாற் சீர்கள் சார்ந்து நடக்கும்: இரண்டிரண் டடிகளில் எதுகை யமைந்தால் திரண்டநல் ஓசை சிறந்தமை வறுமே. இதில் இரண்டடிகளில் ஒரெதுகையாக அமைந் திருப்பதைக் காண்க. இது நிலைமண்டில ஆசிரியப்பா.

மாந்தர்கள் அன்பார் - வாரே, சாந்தியே பெரிய தாரகம் ஆமே ஆந்துயர் பொறுத்தல் அரும்பெருந் தவமே, காந்திவாழ் வெடுத்துக் காட்டா மன்றே. இதில் நான்கு அடிகளில் எதை எங்கே வைத்து எழுதினாலும் பொருள் மாறுவதில்லை. அடியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/64&oldid=655901" இலிருந்து மீள்விக்கப்பட்டது