பக்கம்:கவி பாடலாம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கவி பாடலாம்

எப்படியும் மறித்துப் போடலாம். இது அடிமறி மண்டில ஆசிரியப்பா. அகவலில் மோனை இடத்தில் எதுகை வருவதுண்டு.

வீரரும் வேந்தரும் போரினிற் புக்கார்; மக்களெல் லோரும் தொக்குவாழ்த் தினரே, வெற்றிமா மகள்கைப் பற்றினன் அரசன், சால்விற லின்றித் தோல்வியுற் றவர்கள் புவியுடல் போட்டன ரவிந்தொழிந் தாரே.

இந்த ஆசிரியப்பாவின் ஒவ்வோரடியிலும் மூன்றாம் சீரில் எதுகை வந்தது; அதாவது, முதற்சீரும் மூன்றாம் சீரும் எதுகையாக இணைந்து வந்தன. இதற்குப் பொழிப் பெதுகை என்று பெயர். எதுகை வந்தால் அங்கே மோனை இல்லையே என்ற குறை இராது.

11. ஆசிரியப்பா

இதுவரையில் ஆசிரிய விருத்தத்தைப் பற்றியும், ஆசிரியப் பாவைப் பற்றியும் சில இலக்கணங்களைத் தெரிந்து கொண்டோம். ஆசிரியப் பாவைப் பற்றி இன்னும் சில இலக்கணங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆசிரியப் பாவில் பெரும்பாலும் ஈரசைச் சீர்களே வரும் என்பதை, அவ்வகைச் சீர்களுக்கு அகவற்சீர், ஆசிரிய உரிச்சீர் என்று பெயர் வழங்குவதால் தெரிந்து கொள்ளலாம். சங்க காலத்து நூல்களில் வரும் ஆசிரியப் பாக்களில் காய்ச் சீர் இடையே விரவி வரும். அதனால் அதன் ஒசையே கம்பீரமாக இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/65&oldid=655902" இலிருந்து மீள்விக்கப்பட்டது