பக்கம்:கவி பாடலாம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கவி பாடலாம்

என் என்று முடிவது சிறப்பு’ என்று ஒர் இலக்கண நூல் கூறுகிறது. இணைக்குறளாசிரியப் பாவில் முதல் அடியும், ஈற்றடியும் நாற்சீரடிகளாகவே இருக்க வேண்டும். இடையில் இரண்டு மூன்று நான்கு சீரடிகள் வரலாம். சிறுபான்மை ஐந்து சீர் அடியும் வருவதுண்டு,

இங்கே ஒரு பழங்கதை நினைவுக்கு வருகிறது. கம்பரிடம் யாரோ ஒரு விறகுதலையன் வந்து, “எனக்கு அரசனிடம் பரிசு வாங்கித் தர வேண்டும்” என்று சொன்னானாம். ‘எதையாவது பாடிக் கொண்டு வா; பரிசு வாங்கித் தருகிறேன்’ என்று அந்தக் கவிச் சக்கரவர்த்தி சொன்னாராம். அவனுக்குத் தமிழிலே பயிற்சி இல்லை. எங்கோ நடந்து போகும் போது, வீதியில் சிறு பிள்ளைகள் சிறு வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்களாம். ஒரு பெண் ஒர் ஆண்பிள்ளையை உட்கார்த்தி வைத்து, ‘நீ தான் மாப்பிள்ளை நான்தான் உன் மனைவி; இந்தா இதைச் சாப்பிடு’ என்று ஒரு சிறிய இலையில் மண்ணைப் படைத்தாள். அதைக் கண்ட விறகுதலையன், “மண்ணுண்ணி மாப்பிள்ளையே” என்று சொல்லிக் கொண்டான். அதையே தன் கவியின் தொடக்கமாக வைத்துக் கொண்டான். பிறகு ஒரு காக்கை கத்தியது; “காவிறையே’ என்பதைச் சேர்த்துக் கொண்டான். குயிலின் குரல் காதில் பட்டது. ‘கூவிறையே’ என்று பாடினான். பிறகு அங்கே பெருச்சாளி ஒரு கோவிலில் ஓடியது; “உங்களப்பன் கோவிலில் பெருச்சாளி’ என்று பாட்டை நீட்டினான். எதிரே ஒரு நண்பன் வந்தான். இந்தப் பாட்டை விறகு தலையன் கூறவே, “என்னடா இது? கன்னா பின்னா என்று இருக்கிறது. அரசன் பெயர் வேண்டாமோ?’ என்று கேட்டான். அவன் சொன்னதையும் சோழன் பெயரையும் சேர்த்து, ‘கன்னா பின்னா மன்னா தென்னா சோழங்கப் பெருமானே’ என்று பாட்டை முடித்தான். “மண்ணுண்ணி மாப்பிள்ளையே காவிறையே கூவிறையே உங்களப்பன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/67&oldid=655904" இலிருந்து மீள்விக்கப்பட்டது