பக்கம்:கவி பாடலாம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியப்பா 67

கோவிலில் பெருச்சாளி-கன்னா பின்னா மன்னா தென்னா சோழங்கப் பெருமானே’ என்று அந்த அருமையான கவிதையைக் கம்பரிடம் போய்ச் சொன்னானாம்!

அவர் அதைக் கேட்டுப் புன்முறுவல் பூத்தார். அவனை அரசவைக்கு அழைத்துச் சென்றார். அங்கே அவன் தன் பாடலைச் சொன்னான். கேட்டவர்கள் நகைத்தார்கள். கம்பர் எழுந்து உரை கூறினார்.

‘இதற்குப் பொருள் இன்னதென்பதை ஆய்ந்து காண வேண்டும். நம்முடைய அரசரை முதலில் மன்மதனே என்று அழைத்திருக்கிறார் புலவர். மண்ணுண்ணி-உலகத்தை உண்ட திருமால்; மா-திருமகள். இந்த இருவருக்கும் புதல் வனாகிய மன்மதனே என்று பொருள்பட, மண்ணுண்ணி மாப்பிள்ளையே! என்று தொடங்கியிருக்கிறார். கா என்பது கற்பகம்; அதற்கு இறைவன் இந்திரன்; ஆதலின், காவிறையே என்பதற்கு இந்திரனே என்று பொருள் கொள்ள வேண்டும். கூ என்பது பூமி, அதற்கு இறைவன் நம் பெருமான். உலகச் சக்கரவர்த்தி என்பதையே கூவிறையே என்று உணர்த்தினார். உங்கள் தந்தையாரும் சக்கரவர்த்தி’ என்பதை உங்கள் அப்பன் கோ’ என்றார். அவர் வில்லில் பெரிய சிங்கம் போன்ற திறமையுடையவர்: ‘வில்லில் பெரிசு ஆளி என்று பிரிக்க வேண்டும். வில்லில் என்பது விலில் என்றும், பெரிது என்பது பெருசு என்றும் விகார மாயின. கன்னாகர்ணனே, பின்னா-அவனுடைய தம்பியாகிய தர்மபுத்திரனே, மன்னா-அரசனே, தென்னாதென்னாட்டுக்குத் தலைவன்ே, சோழங்கப் பெருமானேசோழர்களில் பெரியவனே. இப்படிப் பொருள் கொள்ளும் படி பாடிய இப்புலவர் புலமையை நாம் பாராட்ட வேண்டும்’ என்று உரை விரித்தார் கம்பர்.

அதோடு நிற்கவில்லை. அந்த உளறலை இன்ன வகைப் பாடல் என்று சொல்ல வேண்டுமே! இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/68&oldid=655905" இலிருந்து மீள்விக்கப்பட்டது