பக்கம்:கவி பாடலாம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கவி பாடலாம்

இணைக்குறளாசிரியப் பா. ஏகாரத்தில் முடிந்திருக்கிறது: என்று கூறிச் சீரும் பிரித்துக் காட்டினாராம்.

“மண்ணுண்ணி மாப்பிள்ளை யேகா விறையே

கூவிறை யேஉங்க ளப்பன் கோவி லில்பெருச் சாளி கன்னா பின்னா மன்னா தென்னா சோழங் கப்பெரு மானே.”

இணைக்குற ளாசிரியப் பா என்பதைப் பரிகாசம் பண்ணிய பாடலாக இதைக் கருதலாம். எதையும் ஆசிரியப் பாவில் அடக்கி விடலாம் என்று சிலர் எண்ணுவதுண்டு. அதைப் பரிகாசம் செய்யவே இந்தக் கதை எழுந்திருக்க வேண்டும்.

இதோ நல்ல இணைக்குறளாசிரியப் பா ஒன்றைப் பாருங்கள்;

‘நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்

சாரச் சார்ந்து தீரத் தீரும் சாரல் நாடன் கேண்மை சாரச் சாரச் சார்ந்து தீரத் தீரத் தீர்பொல் லாதே.” இதில் உள்ள ஆறு அடிகளில் முதலடியும் ஈற்றடியும் நான்கு சீரடிகளால் வந்துள்ளன. மற்றவை முறையே இருசீரடி இருசீரடி, முச்சீரடி, முச்சீரடியாக அமைந்திருக் கின்றன. இத்தகைய ஆசிரியப்பாக்கள் மிகவும் அருமை யாகவே நூல்களில் வந்துள்ளன. அருமையாக வந்தாலும் அதற்கும் இலக்கணம் உண்டல்லவா? அதனால்தான் அதற்கும், அது போலவே அடிமறி மண்டில ஆசிரியப் பாவுக்கும் இலக்கணம் சொல்லியிருக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/69&oldid=655906" இலிருந்து மீள்விக்கப்பட்டது