பக்கம்:கவி பாடலாம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கவி பாடலாம்

அதன் முன் மா என்ற நேர் வந்தது. மாண்டி என்பதும் கூவிளம்; அதன் முன் சேர்ந் என்று நேர் வந்தது. இவை யாவும் இயற்சீர் வெண்டளை.

(3) காய்முன் நேர்:

காய்ச்சீருக்கு வெண்சீர் என்றும் ஒரு பேர் உண்டு. பெரும்பாலும் வெண்பாவில் வருவதனால் அப்பெயர் வந்தது. நேரில் முடிகிற மூவசைச் சீர்கள் அவை. அவற்றிற்குமுன் நேர் வந்தால் அது வெண்டளை நின்ற சீர் வெண்சீர் ஆதலின் இது வெண்சீர் வெண்டளை யாகும்.

“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு” என்ற அடியில் காய்முன் நேர் வந்ததைக் காணலாம்.

தளை பார்க்கும் போது நின்ற சீர் இன்னதென்று பார்ப்பது போல, வருஞ் சீர் இன்னதென்று கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை; வருஞ்சீரின் முதல் அசையைக் கவனித்தால் போதும். -

ஆகவே, மாமுன் நிரை என்றால், தேமா, புளிமா என்ற இரண்டில் ஒன்று நிற்க, புளிமா, கருவிளம், புளிமாங்காய், கருவிளங்காய், மலர் என்ற வாய்பாடு களையுடைய சீர்கள் வரலாம். தனி நிரையசையே சீராக வந்தால் அதற்குரிய வாய்பாடு மலர் என்பது; வெண்பாவின் இறுதியில் அது வரும். - .

விளமுன் நேர் என்றால், கூவிளம், கருவிளம் என்ற இரண்டில் ஒன்று நிற்க, தேமா, கூவிளம், தேமாங்காய், கூவிளங்காய், நாள் என்ற வாய்பாடு உடைய சீர்கள் வரலாம். நாள் என்பது நேர் என்ற தனி அசையே ஓரசைச் சீராக வருவது; வெண்பாவின் ஈற்றில் அது வரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/73&oldid=655911" இலிருந்து மீள்விக்கப்பட்டது