பக்கம்:கவி பாடலாம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்டளையும் பெண்பாவும் 73

காய்முன் நேர் என்பது, தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் என்ற நான்கில் ஏதேனும் ஒரு சீர் நிற்க, அதன் முன் தேமா, கூவிளம், தேமாங்காய், கூவிளங்காய், நாள் என்ற வாய்பாடுகளையுடைய சீர்கள்

வருவது.

இவை மூன்றும் வெண்டளை.

வெண்பாவில் எதுகை மோனை இல்லாமல் இருக்கலாம்; ஆனால், வெண்டளை இல்லாமல் வராது. திருக்குறளில் சில பாக்களில் எதுகை மோனை இல்லாமல் இருக்கலாம்; ஆனால், 1330 குறட்பாக்களிலும் வெண்டளை அமைந்தே இருக்கும்.

வெண்பாவின் இலக்கணங்களுள் தலையானது வெண்டளை அமைதல்.

வெண்பாக்கள் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, கலி வெண்பா என்று ஏழு வகை. க்லி வெண்பாவைக் கலிப்பாவில் சேர்த்து இலக்கணம் கூறும்; ஆனால், இப்போதுள்ள கலிவெண்பாக்கள் யாவும் வெண்பா இலக்கணம் அமைந்தனவாக இருக்கின்றன. இவற்றை அடியளவைக் கொண்டு ஐந்து பிரிவாக வகுக்கலாம். (1) இரண்டடி வெண்பா-குறள் வெண்பா. (2) மூன்றடி வெண்பா-சிந்தியல் வெண்பாக்கள் (3) நான்கடி வெண்பா-நேரிசை வெண்பாவும் இன்னிசை

வெண்பாவும். -

(4) நான்கு முதல் பன்னிரண்டடி வரையில் பஃறொை

வெண்பா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/74&oldid=655912" இலிருந்து மீள்விக்கப்பட்டது