பக்கம்:கவி பாடலாம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கவி பாடலாம்

(5) பதின்மூன்று முதல் எத்தனை அடியானாலும்

கலிவெண்பா.

இந்த வெண்பா வகைகள் எல்லாவற்றிற்கும் பொதுவாகச் சில இலக்கணங்கள் உண்டு. அவை வருமாறு:

(1) ஓரசைச் சீர், ஈரசைச் சீர், காய்ச்சீர் ஆகியவைகளே

வரும்.

(2) வெண்டளையே வரும்.

(3) ஈற்றடி முச்சீரடியாகவும் மற்றவை யாவும் நாற்

சீரடியாகவும் இருக்கும்.

(4) ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற

வாய்பாடுகளில் ஒன்றை உடையதாக இருக்கும்.

இந்த வெண்பாக்களில் மிகுதியாக வழக்கில் உள்ளது நேரிசை வெண்பா. அதைப்பற்றி முதலில் பார்த்து விட்டு மற்றவற்றைப் பிறகு பார்க்கலாம்.

நேரிசை வெண்பா

நேரிசை வெண்பாவின் இலக்கணத்தை எளிதிலே நினைவில் வைத்துக் கொள்ள நாடோடியாக ஒரு வாய்பாடு வழங்குகிறது. “நாற்சீர்-முச்சீர்-நடுவே தனிச்சீர்’ என்பது அது.

நேரிசை வெண்பாக்களில் இரண்டாவது அடியில் உள்ள மூன்றாம் சீருக்குப்பின் ஒரு கோட்டையிட்டுப்பிறகு நான்காஞ் சீரை எழுதுவது வழக்கம். கோட்டுக்கு அப்புறம் இருப்பதைத் தனிச்சீர் என்று சொல்வர். இரண்டாவதடியின் நாலாம் சீர் அது. அது அந்த அடியின் ஓர் உறுப்பாக இருந்தாலும் அந்த அடியின் முதற்சீருக்கும் அதற்கும் ஒரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/75&oldid=655913" இலிருந்து மீள்விக்கப்பட்டது