பக்கம்:கவி பாடலாம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லயன்ஸ்

பதிப்புரை

‘வாசே கலாநிதி கி.வா. ஜகந்நாதன் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதையுமே தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகத் தன்னால் இயன்றதையும், தனக்குத் தெரிந்த பல விஷயங்களையும் பல வழிகளில் கூறி வந்தார். இவருடைய எழுத்துக்களுக்கு எப்போதுமே ஒரு தனிமதிப்பு உண்டு. காரணம் இவர் தனக்குத்தான் தமிழ் மொழியைப்பற்றி நன்கு தெரியும் என்று கூறிக் கொள்ளவில்லை. தான் அறிந்தவற்றை எளிய, அழகு தமிழில் பேசினார், எழுதினார். பழமைக்கும், புதுமைக்கும் ஒரு பாலமாக விளங்கினார்.

தமிழ் இலக்கியங்களைப்பற்றி நூற்றுக்கும் மேற். பட்ட நூல்களை எழுதினாலும், தமிழ்மொழியை நன்கு கற்க, ஐயப்பாடுகளைத் தீர்த்துக் கொள்ள - கி.வா.ஜ. பதில்கள், கவிதை எழுதுவது எப்படி, மேடைப் பேச்சு - போன்ற வழிமுறை நூல்களையும் எழுதியுள்ளார். கி.வா.ஜ. பி.ழரீ போன்ற தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கியங்களிலும், ஆன்மிக இலக்கியங்களிலும் பற்று கொண்டு எழுதியதால்தான், இன்றளவும் நமக்குப் பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/8&oldid=655918" இலிருந்து மீள்விக்கப்பட்டது