பக்கம்:கவி பாடலாம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்பா இறுதிச் சீர் 79

“தனக்குவமையில்லாதான்றாள்சேர்ந்தார்க் கல்லான்

மனக்கவலை மாற்ற லரிது.”

இந்தக் குறளுக்கு வாய்பாடு சொல்லிப் பாருங்கள்

கருவிளங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமா கருவிளங்காய் தேமா பிறப்பு.

இப்படி வாய்பாடு அமைக்கும் பொழுது இறுதிச் சீரைப் புளிமா என்று அமைக்கக் கூடாது.

நாள், மலர், காசு பிறப்பு என்னும் வாய்பாடுகளை வெண்பா இறுதிச் சீருக்கு அமைத்திருக்கிறார்கள். தமிழ் நாட்டில் யாவருக்கும் தெரிந்த சொற்களாக இருந்தால் வாய் பாடாக வழங்க எளிதாக இருக்கும். இந்தச் சொற்களும், இவற்றால் குறிக்கப்பெறும் பொருள்களும் தமிழ் மக்கள் நன்றாக அறிந்தவை. நாள்-மலர் என்பவை ஒர் இனம்; காசு-பிறப்பு என்பவை ஒர் இனம். நாள் என்பது தினத்தைக் குறிக்கும் பெயர்; காலைக்கும் பெயர். காலையில் மலரும் மலரை நாள் மலர் என்று சொல்கிறோம். ஆதலின், நாளுக்கும் மலருக்குத் தொடர்பு உண்டு; அது பற்றி அந்த இரண்டையும் வாய்பாடாக அமைத்தார்கள். அது மட்டும் அன்று; நாள் என்பதற்கே மலர் என்று ஒரு பொருள் உண்டு; தக்கயாகப் பரணி உரைகாரர் இந்தப் பொருளைச் சொல்கிறார். இதனாலும் நாளும் மலரும் இனமான சொற்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் காசு, பிறப்பு என்ற இரண்டுக்கும் என்ன தொடர்பு, இந்த இரண்டும் யாவருக்கும் தெரிந்த இனமான பொருள்களைக் குறிக்கும் பெயர்களாக இருக்க வேண்டும். அதனால்தான் இந்த இரண்டையும் ஒன்றாக வைத்து வாய்பாடாகக் கொண்டார்கள். பழங்காலத்தில் பெண்கள் அணியும் கலன்களில் காசு, பிறப்பு என்பவை இரண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/80&oldid=655919" இலிருந்து மீள்விக்கப்பட்டது