பக்கம்:கவி பாடலாம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கவி பாடலாம்

“கீசுகீசென்னும்” (7) என வரும் திருப்பாவைப் பாசுரத்தில், ‘காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து’ என்ற அடி வருகிறது. அங்கே காசு, பிறப்பு என்ற இரண்டும் ஒரு சேர வருகின்றன. காசு என்பதற்கு அச்சுத் தாலி என்றும், பிறப்பு என்பதற்கு ஆமைத் தாலி என்றும் பொருள் எழுதியிருக் கிறார்கள். தாலி என்பது கழுத்தில் தொங்கவிடும் அணிகலன். கழுத்தில் தொங்க அணிவதனால் திருமங்கலி யத்துக்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலிகள் அந்த அந்த வகுப்புக்கு ஏற்றபடி வெவ்வேறு உருவம் உடையனவாக இருக்கும். தமிழ் நாட்டில் பெரும்பாலும் இரண்டு வகைத் தாலிகள் வழக்கில் இருக்கின்றன. ஒன்று புலிப்பல்லைப் போலவும் சீப்புப் போலவும் ஒரு பக்கம் பற்களை உடையதாய்த் தட்டையாய்ச் சில அடையாளங்களைப் பொறித்ததாய் இருக்கும். அதுதான் அச்சுத் தாலி. வேறு ஒரு வகைத் தாலி கரண்டி முட்டையைக் கவிழ்த்தாற் போல அரைக்குமிழாக இருக்கும்; ஆமையின் முதுகு ஒடு போலப் புடைத்திருக்கும்; அதைப் பொட்டு என்றும் சொல்வார்கள். அது ஆண்மத் தாலி. கோயிலில் அம்பிகைக்கு அதை அணிந்திருப்பார்கள். பழங்காலத்தில் உருத்திரகணிகை யருக்குப் பொட்டுக் கட்டும் வழக்கம் இருந்தது. அந்தப் பொட்டு ஆமைத் தாலியாகும். .

ஆகையால், இருவகைத் தாலிகளாகிய இனப் பொருளைக் குறிக்கும் சொற்களாகிய காசு, பிறப்பு என்னும் இரண்டையும் வெண்பா ஈற்றடியில் வரும் மாச்சீர்களுக்கு வாய்பாடாக வைத்தார்கள். . . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/81&oldid=655920" இலிருந்து மீள்விக்கப்பட்டது