பக்கம்:கவி பாடலாம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 - கவி பாடலாம்

இரண்டு குறள் வெண்பாக்களை வைத்து, முதல் குறள் வெண்பாவுக்குப் பின் தனிச் சொல்லை இணைத்து வைத்தாற் போன்ற அமைப்பை உடையது இருகுறள் நேரிசை வெண்பா. -

நகைகொள் முகமுடைய நல்லோனாம் காந்தி பகைவனையும் அன்பிற் பரிந்து-மிகநலஞ்செய் பாங்கதனைக் காட்டியிந்தப் பாருலக முள்ளளவும் ஓங்கிநின்றான் நல்லோர் உளத்து.

இந்த வெண்பாவில் இரண்டாம் அடியின் மூன்றாம் சீர் பரிந்து என்று குறள் வெண்பாவின் ஈற்றுச் சீருக்குரிய இலக்கணத்தோடு நிற்கிறது. மிகநலஞ்செய் என்ற தனிச் சொல்லை எடுத்துவிட்டால் இரண்டு குறளை அடுத்தடுத்து எழுதினது போலத் தோற்றும். இது இருகுறள் நேரிசை வெண்பா. இதில் எதுகை இரு வகையாக அமைந்தமையால் , இருவிகற்ப நேரிசை வெண்பாவும் ஆகும்.

‘முருகனே செந்தில் முதல்வனே மாயோன்

மருகனே ஈசன் மகனே-ஒருகைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்.”

இந்தப் பழம் பாட்டில் இரண்டாவது அடியின் மூன்றாம் சீர் மகனே என்பது. இது வெண்பாவின் ஈற்றுச் சீர் ஆகாது. மகன் என்றோ மக என்றோ முடிந்தால் மலர் என்ற வாய்பாடாகக் கொள்ளலாம். மக என்பதற்கு மேல்,னே என்ற அசை ஒன்று கூடுதலாக இருக்கிறது. அந்த அசை இங்கே ஆசு ஆகும். உலோகங்களை ஒன்றோடொன்று இணைக்க உதவும் பொருளுக்கு ஆசு என்றும் பற்றா சென்றும் பெயர். அதுபோலத் தனிச் சொல்லுக்கும் குறள் வெண்பாவின் ஈற்றுச் சீராக இருக்க வேண்டியதற்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/85&oldid=655924" இலிருந்து மீள்விக்கப்பட்டது