பக்கம்:கவி பாடலாம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னிசை வெண்பாவும் சிந்தியல் வெண்பாவும் 89

காவிரிசூழ் மோகைநகர்க் காந்தமலை மேயபிரான் பூவிரிதாள் போற்றுகின்ற புண்ணியர்க்கு-நாவிரியும் பலபுகழும் நீளும் பரந்த பொருளடையும் ஏற்றமன்றித் துன்பம் இலை. இது இரண்டாம் அடியில் தனிச் சொல் பெற்று, மூன்று விகற்பத்தால் வந்த இன்னிசை வெண்பா.

நல்லன வெல்லாம் நனிசெய்வோம் என்றிருத்தல் பூவில் இயலும் பொருளன்றே-ஆவதனால் நாஞ்செய்த யாவையுமே நல்லனவென்றாக ஒழுகினால் மேன்மை யுறும்.

இது இரண்டாம் அடியில் தனிச் சொல் பெற்று நான்கு விகற்பத்தால் வந்த இன்னிசை வெண்பா.

வெண்பாவின் பொது இலக்கணங்கள் அமைந்து நேரிசை வெண்பாவுக்கு வேறுபட்டு நிற்கும் நாலடியுள்ள எல்லா வெண்பாக்களும் இன்னிசை வெண்பாக்கள் ஆம். இந்த வேறுபாடு எதுகையைப் பார்த்தால் தெரிய வரும்.

சிந்தியல் வெண்பா

நேரிசை வெண்பாவைப் போலவும் இன்னிசை வெண்பாவைப் போலவும் மூன்று அடிகளால் வரும் வெண்பா, சிந்தியல் வெண்பாவாகும். சீரானாலும் அடியானாலும் மூன்றாக வந்தால் சிந்து என்ற அடையைப் பெறும். நான்கு அடி சரியான அளவு; மூன்று அடி சிந்து: இரண்டடி குறள். இவற்றை முன்பும் பார்த்தோம். இரண்டடியுள்ள வெண்பாவைக் குறள் வெண்பா என்பர். மூன்றடியுள்ள வெண்பாவைச் சிந்தியல் வெண்பா என்பர்; • .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/90&oldid=655930" இலிருந்து மீள்விக்கப்பட்டது