பக்கம்:கவி பாடலாம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்துறை வகை 95

ஐந்தாம் சீரில் இந்த நியதி இல்லை. இந்தப் பாட்டிலே விமல (புளிமா), புகழ் கொள் (புளிமா), நம்பன் (தேமா), குவிப்பாம் (புளிமா) என்று இருவகை மாச்சீர்களும் ஐந்தாம் சீராக வந்திருப்பதைக் காண்க.

ஐந்து சீர்களையுடைய அடி நெடிலடி என்று பெயர் பெறுமென்று முன்பே தெரிந்து கொண்டிருக்கிறோம். ‘கலித்துறையே நெடிலடி நான்கா நிகழ்வது’ என்று யாப்பருங்கலக் காரிகை கூறும்.

விருத்தக் கலித்துறை என்பது ஒரு வகை.

“வென்றான் வினையின் தொகையாயவி

ரிந்து தன்கண் ஒன்றாய்ப் பரந்த உணர்வின்னொழி

யாது முற்றும் - சென்றான் திகழும் சுடர்சூழொளி

மூர்த்தி யாகி நின்றா னடிக்கீழ்ப் பணிந்தார்வினை

நீங்கி நின்றார்.” இதில் அடிதோறும் ஐந்து சீர்கள் உள்ளன. முன் மூன்று சீர்களிடையே வெண்டளை வந்தது. மூன்றாவது சீர் கணிச்சீராகவும் நான்காவது ஐந்தாவது சீர்கள் மாச்சீராகவும் ளஉள்ளன. குண்டலகேசி, சீவக சிந்தாமணி முதலியவற்றில் இத்தகைய கலித்துறைகள் வந்துள்ளன. காப்பியங்களில் வந்தமையால் இவற்றைக் காப்பியக் கலித்துறையென்றும் சொல்வார்கள். - -

“செம்பொன் வரைமேற் பசும்பொன்னெழுத்

திட்ட தேபோல் அம்பொன் பிதிர்வின் மறுவாயிரத்

தெட்ட ணிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/96&oldid=655936" இலிருந்து மீள்விக்கப்பட்டது