பக்கம்:கவி பாடலாம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 கவி பாடலாம

வெம்புஞ் சுடரிற் சுடருந்திரு

மூர்த்தி விண்ணோர்

அம்பொன் முடிமே லடித்தாமரை

சென்னி வைப்பாம்.’

இந்தச் சீவக சிந்தாமணிப் பாட்டிலும் மேலே சொன்ன வகையில் சீர்கள் அமைந்திருக்கின்றன. பிற்கால நூல்களில் இந்த விருத்தக் கலித்துறையைப் புலவர்கள் மிகுதியாக எடுத்தாளவில்லை.

கட்டளைக் கலித்துறை என்பது ஒரு வகை. கட்டளை என்பது கணக்கு என்ற பொருளையுடையது. எழுத்துக் கணக்கை உடைய பாடல்களுக்குக் கட்டளை என்ற அடை இருக்கும். கட்டளைக் கலிப்பா அத்தகையது. .

கட்டளைக் கலித்துறையும் நான்கு அடிகளும் அடிக்கு ஐந்து சீரும் உடையது. ஆனால் அளவு ஒத்து வருவதன்று. அளவொத்து வருவதாவது, மாச்சீர் ஓரடியில் ஓரிடத்தில் வந்தால் மற்ற அடிகளில் அவ்விடத்தில் மாச்சீரே வருவது. இப்படியே மற்றச் சீர்களும் வரும். கட்டளைக் கலித் துறையில் இந்த வரையறை இல்லை.

இதற்கு எழுத்துக் கணக்கு உண்டு. நேரை முதலாக உடைய அடியில் ஒற்றை நீக்கிப் பதினாறு எழுத்துக்களும், நிரையை முதலாக உடைய அடியில் பதினேழு எழுத்துக்களும் அமைய வேண்டும்.

ஆசிரியச் சீர், வெண்சீர் என்னும் இரு வகைச் சீர்களே இந்தப் பாடலில் வரும்; அதாவது மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர் என்பனவே வரும். ஒவ்வோரடியிலும் கடைசிச் சீர் மாத்திரம் விளங்காய்ச் சீராக இருக்கும்; மற்றவற்றில் காய்ச்சீர் வந்தால் மாங்காய்ச் சீர்களாகவே இருக்கும். ஒவ்வோர் அடியிலுமுள்ள ஐந்து சீர்களிடையிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/97&oldid=655937" இலிருந்து மீள்விக்கப்பட்டது